குழந்தைகளுக்காக புரோட்டின் நிறைந்த பொட்டுக்கடலை கூழ்!

உடலின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. ஒவ்வொரு செல்லின் உருவாக்கம் அதன் மூலம் நடைபெறும் வளர்சிதை மாற்றங்கள், உடலின் செயல்பாட்டிற்கு புரதச்சத்து அவசியம் தேவை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் போதிய புரதச்சத்து இல்லாமல் இறப்பு வரை சந்திக்கும் குழந்தைகள் உண்டு.

புரத பற்றாக்குறை (kwashiorkor)

உடலுக்கு தேவையான புரோட்டின் இல்லாததால் ஏற்படும் நிலையை மருத்துவ அறிவியல் (kwashiorkor) க்வாஷியோர்கர் என்று கூறுகிறது.

புரதப்பற்றாக்குறையின் அறிகுறிகள்

 • வீக்கம்
 • செம்பட்டை நிறத்தில் முடி, வெளிறிய தோல், உடைந்த நகங்கள்.
 • உடல் மெலிவு
 • எலும்புகள் பலமிழத்தல் அதன் விளைவாக எலும்பு முறிவுகள்
 • எளிதில் நோய்வாய்ப்படுதல்

நாளொன்றுக்கு தேவையான புரத அளவு

தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய புரதத்தின் அளவானது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுப்படும். ஒருவரின் உடல் எடை, வயது, அவரது தொழில் வாழ்க்கைமுறை பொறுத்து மாறுபடும். அறிவியியலாளர்களின் அறிவுரைப்படி சாதாரண நபருக்கு 0.8gm/kg அளவு புரதச் சத்தும், விளையாட்டு வீரர்கள் போன்ற கடின உழைப்பாளிகளுக்கு 2gm/kg RDA (recommended daily allowance).

புரதச்சத்து நிறைந்த உணவுகள்

முட்டை, ஆட்டிறைச்சி, கோழிக்கறி, மீன், தானியங்கள், உலர் கொட்டைகள் போன்றவற்றில் புரதம் மிகுந்து காணப்படுகிறது.

வறுமையில் வாடுபவர்கள் மட்டும் அல்ல நல்ல வசதியான வீட்டு பிள்ளைகளும் புரதப்பற்றாக்குறையில் இருக்கிறார்கள். செல்வசெழிப்பான வீடுகளில் தாயின் கவனிப்பு குறையும் போது, பிள்ளைகள் சரிவிகித உணவு இல்லாததால் புரதபற்றாக்குறையில் உள்ளார்கள்.குழந்தைகளின் நொறுக்கு தீனி பழக்கம் அவர்களை வயதுக்கு மீறிய உடலவாகுடன், புரத பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எனில் பொட்டு கடலை கொண்டு செய்யும் கூழினைப்பற்றி பார்ப்போம்!

பொட்டுக்கடலை கூழ்

தேவையானப் பொருட்கள்:

பொட்டுக்கடலை – 1 கப்
சுக்குப்பொடி
கருப்பட்டி / வெல்லம்
தண்ணீர்

செய்முறை:

 • பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்
 • அரைத்த மாவை சலித்து கொள்ளவும்.
 • ஒன்றரை தம்ளர் தண்ணீருக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு எடுத்து நீர்க்க கரைத்து கொள்ளவும்.
 • கருப்பட்டி அல்லது வெல்லத்தை பாகாக எடுத்து கொள்ளவும்.
 • அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பொட்டுக்கடலை மாவை ஊற்றி மெல்லிய தீயில் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டு வரவும்.
 • அரை வேக்காடு வெந்து வரும் போது வெல்லப்பாகு சேர்த்து கிளறி இறக்கவும்.
 • அடுப்பில் இருந்து கூழை இறக்கும் முன்பு சுக்கு பொடி தூவி இறக்கவும்.
 • செரிலாக் போன்ற பதத்தில் ஆறு மாத வயதில் இருந்தே ஊட்டலாம்.

புரதச்சத்து நிறைந்த பொட்டுக்கடலை ஏழைகளின் பாதாம் பருப்பு.

வளரும் குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்து இதில் உள்ளது.


Protein is used to build and repair tissues. Protein serves as an important building block of bones, muscles, cartilage, skin, and blood. Malnutrition caused by protein deficiency in diet is Kwashiorkor. Protein rich foods include as egg, fish, cereals, dry fruits, carrot, spinach, milk. Insufficient Protein leads to weight loss, muscle weakness, swelling, low blood pressure, lower heart rate, immunity, anemia, liver disorders, etc. Here we have Fried Gram Porridge(Pottukadalai Koozh) recipe to provide enough protein to the growing children where the fried gram has high protein content. A suitable recipe for babies below 3 years is given here.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.