கர்ப்பக்காலத்திற்க்கு ஏற்ற கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை!

கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணியின் உணவின் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெறுகிறது. அதனால் தான் கர்ப்பக்காலத்தில் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தப் படுகிறது. குழந்தைக்கு பிறவியில் ஏற்படும் இதயக்கோளாறுகள், பார்வைக் குறைபாடுகள், நரம்பியல் கோளாறுகளை தவிர்க்கத் தான் சத்துக்கள் நிறைந்த உணவுகள் உண்பது அவசியமாகிறது.

விட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகள் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

தினசரி ஒரே மாதிரி உண்ணாமல், வித்தியாசமான அதேசமயம் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த கேழ்வரகு மற்றும் முருங்கைக் கீரை சேர்த்த அடையை செய்து உண்ணலாம்.

கேழ்வரகு, முருங்கைக்கீரை இரண்டையும் கலந்து அருமையான அடை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 • கேழ்வரகு – 1/4 கிலோ
 • முருங்கைக் கீரை – கைப்பிடியளவு
 • வெங்காயம் – 2
 • பச்சரிசி – கால் கப்
 • உளுத்தம்பருப்பு – கைப்பிடியளவு
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

 • முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.
 • கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)
 • பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
 • அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 • தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
 • சூப்பரான சத்தான கேழ்வரகு தோசை ரெடி. தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

Ragi Drumstick Leaves Adai is essentially a flat bread packed with proteins and is a wholesome breakfast recipe.For those busy mornings, when you want to eat healthy and wholesome breakfast, this recipe is a life savior.Serve it along with chutney for your breakfast. Ragi Murungai Adai is super healthy but not everyone likes Ragi. This iron rich recipe is great for diabetics and makes a healthy breakfast option. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.