மிச்சம் உள்ள சாதத்தில் ருசியான ரைஸ் சப்பாத்தி செய்யலாம் வாங்க!

எத்தன்னை கணக்கு போட்டு அளவாக சமைத்தாலும், மீதமாகும் உணவுப்பொருட்கள் என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் தலைவலி. பழைய சோறு உண்டு வளர்ந்த நேற்றைய குழந்தைகளின் இன்றைய வாரிசுகள் மதிய உணவை இரவு சாப்பிடத் தயார் இல்லை.

பிரிட்ஜில் வைத்து மீந்த உணவுகளை உண்டு, தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியத்தை இழந்தது தான் மிச்சம். ஹோட்டல் என்றால் மீதமாகும் வடைகளை, வடைக்கறி, தயிர் வடை, பிரைடு ரைஸ், சாம்பார் வடை என்று காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள்.

காசுக்கொடுத்து வாங்கிய மளிகைப் பொருட்கள், உணர்வைத் தயாரிக்க எடுத்துக் கொண்ட உழைப்பு, எரிபொருள் எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று வேளையும் உணவில்லாமல் உறங்க செல்லும் ஏழைகள் நிறைந்த நாடு தான் நம் பாரதம். எல்லாக்காரணிகளையும் மனதில் கொண்டு மீதியான உணவுப்பொருட்களை ரீ மேக் செய்து புதுப்பெயர் சூட்டி அழகுப் படுத்தி உண்ணவைக்க வேண்டும்.

சோறு மீதமாவதை தவிர்க்க இயலுவதில்லை. திடிர் விருந்தாளிக்காகவும், பிள்ளைகள் கூட ஒரு வேளை சாப்பிட என்ற எண்ணத்தில் அளவாக சோறாக்க முடிவதில்லை. மீதமாகும் சாதத்தை ஆப்பத்துக்கும், வடகமாகவும், கலவை சாதமாக சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு ஒரு அருமையான ரெசிபி தான் ரைஸ் சப்பாத்தி. செய்வது மிகவும் சுலபம், சுவையும் கூட.

Preparation time – 10 minutes
Cooking time – 10 minutes
Category – roti / leftover

தேவையான பொருட்கள் :
மீதியான சோறு – 3/4 கப்
அரிசி மாவு – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை
உப்பு
தண்ணீர்

செய்முறை :

  • மிக்ஸியில் சோறு, அரிசி மாவு, உப்பு சேர்த்து அரைக்கவும். தண்ணீர் தெளித்து கட்டியான மாவாக அரைக்கவும்.
  • அரைத்த மாவை சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும்.
  • சப்பாத்தி போல வட்டமாக தேய்த்து எடுக்கவும்.
  • மாவு ஒட்டாமல் சப்பாத்தி தேய்த்து எடுக்க அரிசி மாவு தூவி தேய்க்கவும்.
  • தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்து தேய்த்த சப்பாத்தியை போடவும். சப்பாத்தி சுடுவது போல இந்த ரைஸ் சப்பாத்தியை சுட்டெடுக்கவும்.

குறிப்பு : விருப்பமுள்ளவர்கள் தேய்த்த சப்பாத்தி மீது சீரகம், நறுக்கிய கொத்தமல்லி தூவி சுடவும்.

இந்த சப்பாத்திக்கு வெஜிடபிள் குருமா / சிக்கன் / மட்டன் குருமா நல்ல காம்பினேஷன்.


We usually prepare vada curry, thayir vada, fried rice, sambhar vada from the left over rice. Now we have a recipe called rice chapati or rice roti which is a remake of left over rice. It can be made in a quick time and eaten with combination of veg kurma / chicken gravy / chicken kurma or mutton kurma. Follow the above steps to prepare rice chapati easily at home.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.