பாகற்காயில் தொக்கு செய்ய முடியுமா?

பாகற்காயின் கசப்பு சுவையின் காரணமாக விரும்பாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வேறு எந்த காயுக்கும் இல்லாத அதேசமயம் அதன் பிரத்யேக சுவையான கசப்புக்காக விரும்பி உண்பவர்கள் உண்டு. அறுசுவையும் கலந்ததே சிறந்த உணவு என்பதால் பாகற்காயை குடும்பத்தினர் விரும்புவது போல சமைத்து கொடுக்க வேண்டும் .பாகற்காயை தொக்கு போல செய்யும் போது தொடுகறியாக உண்ணலாம்.

தேவையான பொருட்கள்

 • பாகற்காய்  – 1 கப்
 • வெங்காயம் – 1/2 கப்
 • தக்காளி – 1 கப்
 • புளி – 1 துண்டு
 • உப்பு – தேவைகேற்ப
 • மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
 • பெருங்காயம் – 1 சிட்டிகை
 • மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
 • ந.எண்ணெய் – தேவையான அளவு
 • கடுகு – 1 ஸ்பூன்
 • உளுந்து  – 1 ஸ்பூன்
 • வெல்லம் – 1 துண்டு
 • அரிசி – 1 ஸ்பூன்
 • சீரகம்  – 1 ஸ்பூன்
 • துவரம்பருப்பு – 1 ஸ்பூன்

செய்முறை

 • முதலில் பாகற்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
 • பின் அரிசி, சீரகம், துவரம்பருப்பு சிவக்க வறுத்து அரைக்கவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு போட்டு வெடித்த பின் உளுந்தை  சேர்க்கவும்.
 • கறிவேப்பிலை, பாகற்காய் சேர்த்து 5 முதல் 7 நிமிடம் கிளறிய பின் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, புளிக்கரைசலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
 • நன்கு கொதித்து சுருண்டு வரும் நிலையில் வெல்லம் சேர்க்கவும்.
 • எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் அடுப்பை அணைத்து இறக்கி ஆறியதும் ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
 • இது சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/ தோசைக்கும் தொட்டுக்கொள்ள சுவைக்கும்.

According to studies, bitter gourd has a few active substances with anti-diabetic properties. One of them is charantin, which is famous for its blood glucose-lowering effect. These substances either work individually or together to help reduce blood sugar levels. Bitter melon has positive effect on diabetes, blood pressure, immune system, pneumonia, cancer and infection. The extract of fruits has protective effect on diabetic kidney disease due to its antioxidant properties. Also helps in lowering the bad cholesterol levels in the body. Thereby, it significantly reduces the risk of heart attack and stroke.” It also maintains the blood pressure of the body as it is rich in potassium, which absorbs excessive sodium in the body. Consuming bitter gourd can help you get rid of acne, blemishes and skin infections and gives you a healthy and glowing skin.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.