பேலியோ டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற தேங்காய் சம்பல்!

சைவ பேலியோ டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய் ஒரு சிறந்த உணவு வகை. இதனை காரம் குறைவாக சேர்த்து வெறுமனே உண்ணலாம். சூடான காலிஃப்ளவர் பொங்கல், காலிஃப்ளவர்  சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும் இந்த தேங்காய் சம்பல். 

சம்பல் இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, ரொட்டி, சோறு, போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக இதனௌ தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவுப் பண்டமாகும். இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் செய்யப்படும் இதில் பல வகைகள் உண்டு.

அவை

 • இடிசம்பல் (இடித்த சம்பல்)
 • அரைத்தசம்பல்
 • தேங்காய்ச்சம்பல்
 • மாசிக்கருவாட்டுச்சம்பல்
 • கத்தரிக்காய்ச்சம்பல்
 • மாங்காய்சம்பல்
 • சீனிச் சம்பல்
 • வல்லாரைச்சம்பல்

தேங்காய் சம்பல் செய்முறையை தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்

 • துருவிய தேங்காய் – 1கப்
 • சின்ன வெங்காயம் – 6-10 வரை
 • வரமிளகாய் – ருசிக்கேற்ப
 • உப்பு  – தேவையான அளவு
 • தேங்காய் எண்ணெய் – 1கரண்டி.
 • கடுகு உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

 • சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
 • மிக்ஸியில் வரமிளகாய் மற்றும் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி மசிந்ததும் அதனோடு துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 
 • அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் உள்ள ஒன்றிரண்டாக அரைத்த தேங்காயை சேர்த்து  வதக்கி இறக்கவும். 

சுவையும் மணமும் நிரம்பிய தேங்காய் சம்பல் தயார்!


The diet typically involves a lot of home cooking, it can be time-consuming. Grated coconut is the main ingredient in this recipe. Some people say coconut is good for our health unless we make it to coconut milk and add to a curry. If it’s true, yes, definitely, this easy coconut sambal is good for our health. On the other hand, we add onions which are really good for our health.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.