விநாயகர் சதுர்த்தி Special கொழுக்கட்டை செயல்முறை !!!!

இந்த விநாயகர் சதுர்த்திக்கு அனைவரும் விரும்பும் சத்தான கொழுக்கட்டை செய்ய கோதுமை ரவை வைத்து சுவையான கொழுக்கட்டை செய்யலாம்.அதன் செயல்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

 • கோதுமை ரவை – 1 cup
 • கடலை பருப்பு – கால் cup
 • காய்ந்த மிளகாய் – 2 nos
 • தேங்காய் துருவல் – கால் cup
 • தண்ணீர் – 2 cup
 • உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள் :

 • எண்ணெய் – தேவைக்கு
 • கடுகு – 1 tsp
 • கடலைபருப்பு – 1 tsp
 • உளுந்தம் பருப்பு – 1 tsp
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை :

 • வெறும் வாணலில் கோதுமை ரவையை போட்டு பொன்னிறமா வரும் வரை வறுக்கவும்.
 • கடலைப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
 • அதன்பின் வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்த ரவை மற்றும் அரைத்த கடலைப்பருப்பு விழுது, சிறிது உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
 • கலவை உப்புமா பதத்தில் வந்தவுடன் அதை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் வேக வைத்து வெந்தவுடன் எடுக்கவும்.

சுவையான கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.