கிச்சன் டவலில் ஒளிந்திருக்கும் அபாயங்கள்!

சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கிச்சன் டவல். சமையலோடு அதாவது உணவுக்கும், சமைக்கும் முறைக்கும் எந்த தொடர்பும் இல்லாத துணி. சமைப்பவரின் கைகளை பாத்திரத்தின் சூட்டில் இருந்து காப்பாற்றும் என்பது நாம் அறிந்ததே. கிச்சன் டவல்கள் சுத்தமான காட்டன் துணியில் செய்யப்பட்டது. சமையலறை டவல்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காவிடில் நோய் தொற்று ஏற்படும்.

கிச்சன் டவலை ஈரப்பாத்திரங்களை துடைக்க, சமையல் மேடையை துடைக்க, ஈரமான கைகளை துடைக்க என பயன்படுத்துகிறோம்.ஈரமும், அழுக்குகள் சேரும் போது கிருமிகளுக்கு கொண்டாட்டம். ஈரடவலில் தான் கோலிஃபாம் (Coliforms (Escherichia coli) பெருகி இருக்கும். அதிலும் அசைவ உணவு சமைக்கும் இடங்களில் மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கிச்சன் டவலில் உற்பத்தி ஆகும் கிருமிகள் சமைப்பவர் மூலமாக குடிநீர், ஆறிய பதார்த்தங்களில் குடிபெயர்கிறது.

உணவு விஷமாதல் (food poisoning)

சமைத்த உணவு, அதற்கான பொருட்களின் தரம், சமையல் மேடையின் சுகாதாரம், சமைப்பவரின் மூலமாக கூட உணவு நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.இதனால் இந்த உணவை உண்பவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாவார்கள்.

ஈ.கோலி எனும் கிருமிகள் மனித குடலில் இருக்கும், மலக்கழிவுகள் வெளியேறும்.மலம் கழிந்தபின் சுத்தமாக கைகளை கழுவாதபோது, அவர் மூலம் கிச்சன் டவல் உணவுகள் மூலம் குடும்பத்தினரும் நோய் தொற்றுக்கு ஆளாவார்கள்.

கிச்சன் டவல் பராமரிப்பு

  • கிச்சன் டவல்களை சுத்தப்படுத்துவதற்கு, நுண்ணுயிர்களை கொல்லும் திறன் உள்ள டிடர்ஜன்ட்களை உபயோகிக்க வேண்டும். இவை பூஞ்சைகளின் உருவாக்கத்தை தடை செய்து, டவலில் உள்ள துர்நாற்றத்தையும் வெளியேற்றுகிறது.
  • சுத்தமான நீரில் அலசி, சூரிய ஒளியில் உலரவைத்தல் அவசியம்.

குடும்பத்தினரின் ஆரோக்கியம் என்பது இல்லத்தரசியின் கைகளில் உள்ளது. சமையலறை மற்றும் குளியலறை இரண்டுமே குடும்பத்தினரின் சுகாதாரமான பழக்கவழக்கங்களை பறைச்சாற்றும்.


Multi-purpose towels contaminate easily with E. coli bacteria, mainly the humid towels. Kitchen and tea towels causes the risk of food poisoning. It is important to wash hands and kitchen/tea towels in regular basis and dry up in sunlight to kill germs and avoid such risks.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.