சேலையின் அழகைக் கூட்டும் ப்ளவுஸ்

எத்தனை விலையுயர்ந்த புடவையாக இருந்தாலும் அதன் அழகுக்கு அழகு சேர்ப்பது பொருத்தமான ப்ளவுஸ் தான். அந்தக்கால சாவித்திரி காலத்தில் இருந்து இந்த காலத்து கீர்த்தி சுரேஷ் காலம் வரை டிசைனர் ப்ளவுஸ்கள் வலம் வந்துள்ளது. ஹை – நெக் ப்ளவுஸ், நதியா கொண்டையில் சிந்து பைரவி சுஹாசினியை இன்று வரை நினைவில் இருக்கிறது.

பைப்பிங் – Piping, Puff கை வைத்து என ப்ளவுஸ்களில் வித்யாசம் காட்டிய தேவிகா, இவ்வளவு ஏன் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று படமே எடுத்த ஊர் இது. இங்கு ரசனையாக உடுத்தாமலா? ரசனையும் மீறி கண்ணியமான ஆடைகளை தான் தமிழகத்தில் அணிவதை விரும்புவார்கள் என்பது தமிழகத்தின் பெருமை.

சன்னல், புல் ஸ்லீவ், ஸ்லீவ்லெஸ், ஹை நெக் காலம் போய் இப்போது வரும் ப்ளவுஸ் டிசைன்கள் கண்ணைப் பறிக்கும் நிறம், ஜொலிக்கும் கண்ணாடி, கற்கள், ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த கலைப்படைப்பு ஆகத்தான் உள்ளது.

அதிலும் கல்யாணப்பெண்களுக்கு என்று சிறப்பு கவனத்துடன் வைக்கப்படும் ப்ளவுஸ்கள் பலநேரங்களில் புடவையை விட அழகாக இருக்கிறது. நல்ல ரசனையுடன் அந்த டிசைனை தேர்வு செய்த மணமகளை பாராட்டுவதா , அதை கலைநயத்துடன் தைத்த தையல் கலைஞர், கைவேலைப்பாடு கலைஞரை பாராட்டுவதா என்று குழம்பிப்போன துண்டு.

இன்றைய காலகட்டத்தில் பிரபலமாக உள்ள சில ப்ளவுஸ்களின் டிசைன்களை பார்ப்போமா?

ஜாக்கெட் ப்ளவுஸ் (Jacket Blouse)

மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் இந்த வகை ப்ளவுஸ் மாடலை தேர்ந்தெடுக்கவும். ஜார்ஜெட் ரக புடவைகளுக்கு இந்த வகை ப்ளவுஸ்களை தவிர்க்கலாம்.

ஸ்பெகட்டி நாடா ப்ளவுஸ் (Spaghetti Strap Blouse)

வடிவான தோள்களும், கைகளும், நீண்ட கழுத்தும் உள்ளவர்களுக்கு இந்த வகை ப்ளவுஸ் அழகாக இருக்கும். பெரும்பாலான நட்சத்திரங்களுக்கு இந்த வகை ப்ளவுஸ் அழகாகத் தான் உள்ளது.

கைகளின் வித்தியாசமான டிசைன் (Focus On Sleeves)

ஒல்லியாக இருப்பவர்கள் இந்த வகை ப்ளவுஸ் அதாவது நீண்ட ஸ்லீவ் வைத்த ப்ள்வுஸ் முயற்சி செய்யலாம். ப்ளவுஸின் பார்டரில் லேஸ் வைத்து கூட அழகுப்படுத்தலாம்.

ஹை நெக், போட் நெக், டீப் நெக், காலர் நெக் என்று சுமார் நூறு வகைகளுக்கு மேல் உள்ளது. அவரவர் உடல்வாகு, கட்டும் புடவை, செல்லும் இடம், எந்த மாதிரியான நிகழ்ச்சி, சீதோஷ்ண நிலை இத்தனையும் கவனித்து தான் பெண்கள் உடைகளை தேர்வு செய்து உடுத்ஊஉகிறார்கள். ஆகச்சிறந்த ரசனையாளர்கள் பெண்கள் என்றால் மிகையாகாது.


Saree’s design or worth will be fulfilled only with a beautiful combination of blouse. Latest blouse varieties include, jacket blouse, Spaghetti Strap Blouse, Focus of Sleeves Blouse are a few to name. Other than these, there are high-neck, boat neck, deep neck, collar neck and the designs goes on to hundreds in number. Blouse should be chosen based on the saree, your skin color and the climate you are in.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.