அணிகலன்களின் ராணி – கோவில் நகைகள் (Temple Jewellery Collections)

தன்னை அழகுபடுத்தி பார்க்க ஆசைப்படுவதில் மனிதனுக்கு நிகர் மனிதனே! இதில் ஆணென்ன! பெண்ணென! அதிலும் இந்திய கலாச்சாரத்தில் நகைகளுக்கென்ன தனியிடம் உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரத்யேக வடிவமைப்பு , ஒவ்வொரு நகைக்கும் பின்னே பலரது உழைப்பு, ஒவ்வொரு குடும்ப விழாவும் நகைகளுடன் தொடர்புடையது .குறிப்பாக தென் இந்தியாவில் காது குத்துதல், வளைகாப்பு, தாலிக்கு பொன் உருக்குதல் தாலி கட்டுதல் என வெவ்வேறு குடும்ப நிகழ்ச்சிகள்.

இந்தியாவின் ஆபரண உலகை மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம். அவை, கோவில் நகைகள், ஆன்மிக நகைகள் மற்றும் திருமண நகைகள்.

கோவில் நகைகள் (Temple Jewellery Collections)

மனிதன் தன்னைப் போன்றே தன்னைக் காக்கும் கடவுளை மலர்களாலும், ஆடைகளாலும், நகைகளாலும் அழகுப்படுத்தி பார்த்தான். விலை உயர்ந்த கற்கள், முத்து, பவளம் பதித்த எடை அதிகம் உள்ள பெரிய அளவில் செய்த நகைகளை தன்னைக் காக்கும் கடவுளுக்கு அணிந்து பார்த்தனர்.

தென்னிந்தியாவில் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தே நகைகள் செய்யும் தொழிலும் அணிவதும் நடைமுறையில் இருந்து உள்ளது. இதற்கு சான்றாக பல சங்க பாடல்களில் நகைகளின் குறிப்புகள் உள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் அரசாண்ட சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் காலம் ஆபரணங்களின் பொற்காலம் எனலாம்.

திறன் மிகுந்த பொற்கொல்லர்கள் மூலம் அரச குடும்பத்திற்க்கும் , ஆலயங்களில் குடி யிருக்கும் தெய்வ திருவுருக்களுக்கும் ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்த்தனர்.

அரசக்குடும்பதினரிடம் மட்டுமே இருந்த கோவில் நகைகளை எளிய மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றது நடனத்தை பரப்பிய நாட்டிய மகளிர்கள் தான்.

சுதந்திரமான தங்கத்துடன் வெள்ளி , முத்து , பவளம் , வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த கற்கள் , ரத்தினங்கள் பதித்து , பாரம்பரிய வடிவங்களான லட்சுமி திருவுரு , பூக்கள் , இழைகள் அலையாடும் நகைகள் என்பதே கோவில் நகைகளின் சிறப்பு.

கோவில் நகைகளை மூன்று விதமாக பிரித்து உள்ளனர். தினசரி பயன்படுத்தும் வகையில் எளிமையாகவும் , நாட்டிய மங்கைகளுக்கென எடை மிகுந்த பிரத்யேக வடிவமைப்பு கொண்டும் , நவநாகரீக மங்கைகளை குறிவைத்து அவர்களுக்கேற்றவாறு வடிவமைத்த நகைகள் .

மூக்குத்தி , தோடு , ஜிமிக்கி , செயின் , சோக்கர் , நெக்லஸ் , ஆரம் , வங்கி , சுட்டி , ஒட்டியாணம் , கொலுசு வரை கோவில் நகைகளில் உள்ளது.

டெம்பிள் ஜீவல்லரிகளின் சொர்க்கம் என்றால் அது நாகர்கோவில் வடசேரியில் தான் உள்ளது.உலகெங்கும் பயணம் செய்யும் கோவில் நகைகள் வடசேரி நகைகள் என்ற பெயரில் தான் செல்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான பொற்கொல்லர் பரம்பரையில் வந்த குடும்பத்தினர் இன்று வரை இந்த தொழிலை தொடர்கின்றனர்.

நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு. அவர்களுக்கு பிடித்த ஆபரணங்களை அழகுபட வடிவமைத்து , செய்வது பெரும்பாலும் ஆண்களே! அழகிய முரண்!


Jewelry collections and varieties of designs. Jewel selection tips and advice in Tamil.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.