மதுரையின் பெருமை மனம் மயக்கும் சுங்குடிச்சேலை!

சேலைக்கட்டும் பெண்கள் எல்லோரிடமும் ஒரு சுங்குடிப்புடவையாவது இருக்கும். பின் கொசுவம் வைத்து இன்றைய பெண்கள் புடவை கட்டுவதில்லை என்றாலும், சுங்குடி சேலையின் அழகுக்காகவே பெண்களின் புடவை கலெக்ஷனில் இதற்கு ஒரு இடம் உண்டு.

கல்லூரி மாணவிகள் முதல் வயதானவர்கள் வரை இந்த புடவையின் அழகுக்காக மட்டுமன்றி, வெயிலுக்கு இதமான பருத்தி, அதன் பளிச்சிடும் நிறங்கள், எந்த வயதினர் உடுத்தினாலும் அழகும், கம்பீரமும் தரும் என்பதாலும் விரும்புகின்றனர்.

சுங்குடி சேலை வரலாறு

மதுரை மல்லி, மதுரை ஜிகர்தண்டா என தூங்கா நகரின் சிறப்புகளில் சுங்குடிப் புடவையும் ஒன்று. கலாச்சார மையமான மதுரையில் சுமார் நானூறு வருடங்களுக்கு முன் நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து வந்த சௌராஷ்டிரர்கள் திருமலை நாயக்கரின் வேண்டுதலின் பெயரால் அவர்களது பாரம்பரிய தொழிலான நெசவை செய்து வந்தனர்.

சௌராட்டிர மொழியில் கலந்த “சுண்ணம்” என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்கு வட்டம் என்ற பொருள் தரும். முடிச்சுகளால் போடப்பட்ட புட்டாக்கள் வட்டப்புள்ளிகளாக இருந்தது. சுண்ணம் நாளடைவில் சுங்குடியாகி மருவியது போல.

தமிழ்நாட்டின் பருத்தி இழைகளுடன் பட்டு ஜரிகைகளை இணைத்து புதுவிதமான துணிகளை நெய்தனர். இவர்கள் உருவாக்கிய டிசைன்கள் குஜராத்தின் பாந்தினி புடவைகளை ஒத்திருந்தது. பட்டு, ஜரிகை ஆடைகளை விரும்பி அணியும் அரசக்குடும்பத்தினரின் பேராதரவில் சுங்குடி சேலையின் கேந்திரமானது மதுரை.

சுங்குடி சேலை தயாரிப்பு

தூய பருத்தியினால் நெய்த துணிகள் நன்றாக சலவை செய்யப்படுகிறது. அதாவது ப்ளீச்சிங் செய்யப்படுகிறது.

வெளுக்கப்பட்ட துணியில் இயற்கை முறையில் சாயம் ஏற்றுகிறார்கள். சாயம் ஏற்றும் முன்பு செய்யும் பிரத்யேக செயல்களே சுங்குடி சேலையின் அழகைக் கூட்டுகிறது.

சாயமேற்றவேண்டிய துணியில் சிறு சிறு முடிச்சுகள் போடுகிறார்கள். பிறகு சாயமேற்றுகிறார்கள். சாயமேற்றும் போது சிறு முடிச்சுகளில் சாயம் ஏறாததால் வெள்ளை புட்டாக்கள் அதாவது புள்ளிகள் அழகாக தோற்றமளிக்கிறது. முந்தானை மற்றும் பார்டர்களுக்கு தனியாக சாயம் ஏற்றுகிறார்கள். ஒரு புடவையை தயார் செய்ய பத்திலிருந்து பதினைந்து நாட்கள் ஆகிறது.

தயாரிப்பு முறைகளில் நவீனம்

பழைமையான கட்டுதல் அதாவது முடிச்சு போடுதல் மற்றும் சாயமேற்று முறைகள் அரிதாகி, நவீன முறையில் சாயம் ஏற்றப்பட்ட சேலைகளில் மெழுகு அச்சுகள் இடப்படுகின்றன. பத்திக் பிரின்டிங் (pathik printing), ப்ளாக் பிரின்டிங் (block printing) முறைகளில் கூட டிசைன்களை உருவாக்குகிறார்கள்.

சுங்குடி சேலைகள் ஏற்றுமதி

உலகெங்கும் உள்ள புடவை பிரியர்களுக்காக மதுரையில் இருந்து ஏற்றுமதி செய்கின்றனர். நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி சுங்குடி புடவைகளை விரும்பி அணிவாராம்.

சுங்குடிச் சேலைகளுக்கு 2005 ம் ஆண்டில் புவிக்குறியீட்டு எண் தரப்பட்டு அவை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Madurai sungudi sarees are very famous in Tamilnadu with its cultural uniqueness and its tradition. There are various ranges in price and designs to choose from if you have looking to wear latest and modern saree of this genre. From students to office goers, sungudi saree has got lots of variety like rani sungudi sarees and so on. Sungudi sarees hold the beauty of Tamil fashion with tradition.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.