உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க நாம்உடலுக்கு தேவையான அனைத்து சத்தான உணவு வகைகளை சாப்பிடவேண்டும். இந்த வரிசையில் தேங்காய்ப்பால் வைத்து ஆடிப்பால் செய்வதை தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 3 cup
பொடித்த வெல்லம் – 1 1/2 cup
ஏலக்காய் தூள் – 1 1/2 tsp
செய்முறை:
தேங்காய் துருவலை அரைத்து மூன்றில் இருந்து நான்கு முறை பாலை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள், கடைசியாக எடுக்கும் வடிகட்டிய பாலுடன் வெள்ளத்தை பொடியாக்கி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
வெள்ளம் பாலுடன் சேர்ந்து நன்கு கொதித்த பின் அதையும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது முதல் மூன்று முறை அல்லது இரண்டு முறை வடிகட்டிய தேங்காய் பாலுடன் சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
அதன் பிறகு நன்கு கொதிக்கும் பொழுது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி விடவும்.
சுவையான சத்தான ஆடிப்பால் தயார்.