முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடி அழிக்கவும் முடி உதிர்வதை தடுக்கவும் ஆவாரம்பூ பெண்களுக்கு உதவுகிறது.
ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்.
பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ ஆகிய மூன்றையும் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.
செம்பருத்தி, தேங்காய்ப் பால் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று முறை தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கூந்தலும் நன்கு வளர ஆரம்பிக்கும்.
ஆவாரம் பூவின் சாற்றை தேங்காய் எண்ணெயை சேர்த்து தினமும் முடிக்கு தடவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி நன்கு வளருவதுடன் முடி கொட்டுவதும் நின்று விடும்.