உடல் சூட்டை பனி போல தணிக்க கற்றாழை ஜூஸ்!

கற்றாழை இயற்கையின் அதிசயம். கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழைக்கு “குமரி”, என்ற பெயரும் உண்டு.மனிதனின் இளமையை தக்க வைக்கும் தன்மை கொண்டது என்பதால் வந்த காரணப்பெயரோ?

உலகெங்கும் சுமார் ஐநூறு வகை கற்றாழைகள் உள்ளது. அவற்றுள் சில
சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றாழையை தவிர்த்து விட்டு அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கற்றாழையில் உள்ள ஆலோயின் முகப்பூச்சு க்ரீம்களின் தயாரிப்புகளில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். உடற்சூடு தணித்து, சிறுநீர் தாரைகளின் எரிச்சலை நீக்கும்.

சோற்றுக் கற்றாழையை சுத்தப்படுத்துவது எப்படி?
சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து, கண்ணாடி போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் 7 – 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின்  கசப்பும் குறைந்துவிடும்.

சுத்தப்படுத்திய நுங்குசுளைப்போல இருக்கும் கற்றாழைத்துண்டங்களை அப்படியே சாப்பிடவும் செய்யலாம்.சாறு, சர்பத், அல்வா என்று விதவிதமாக  சமைக்கிறார்கள். பெண்களின் கற்பனைக்கு எல்லை ஏது? சில விசேடமான அதேசமயம் மிகவும் எளிதான ரெசிபிகளை பார்ப்போம்.

கற்றாழை ஜூஸ்

வெயிலுக்கு இதமான குளுகுளு ஜூஸ்.மலிவு விலையில் மகத்தான பானம். உடற்சூட்டை உடனேத் தணிக்கும் இந்த பானம்.

தேவையான பொருட்கள் :
கற்றாழை துண்டுகள்
எலுமிச்சை
தேன்

செய்முறை :
சுத்த படுத்திய  கற்றாழை துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் தேவையான, எலுமிச்சை சாறு, நீர் மற்றும் இனிப்புக்காக பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

சுவையும் ஆரோக்கியமும் ஒருங்கிணைந்த சூப்பர் ட்ரிங்!

கற்றாழை லஸ்ஸி

தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த கற்றாழை துண்டுகள்
இந்துப்பு (ப்ளாக் சால்ட்)
புதினா இலைகள்
கட்டித் தயிர்
ஐஸ் கட்டிகள்

செய்முறை :
மிக்ஸியில் கற்றாழையை நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன்ஐஸ் கட்டிகள் , தயிர், காலா நமக் அதாவது ப்ளாக் சால்ட் கலந்து அடிக்கவும்.

நுரைத்து ததும்பும் லஸ்ஸியை பருகுங்கள்!

Aloe vera has antibacterial and anti-inflammatory property. This helps reduce your acne. It is recommended to drink no more than two to four ounces (50 to 100 milliliters) of aloe vera juice daily. Intake of aloe vera has several benefits such as treating burns, healing cold sores, moisturizing hair and scalp, treating constipation, helping with Digestion, boosting the immune system, providing antioxidants and reduces inflammation. It acts as a great conditioner for hair and leaves hair all smooth and shiny. Follow the given procedure to prepare aloe juice and lassi to get benefited from it.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.