இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்து பாடல்களாக பாடி வைத்துள்ளார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணி இதனைப் பற்றியும் பாடியுள்ளார்கள்.
அருகம்புல் செய்முறைகள்
அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. சுத்தமான இடத்தில் இருந்து அருகம்புல் சேகரித்து கொள்ள வேண்டும். நன்கு நீரில் அலசி, சுத்தப்படுத்திய பின்னர் உபயோகப்படுத்தவேண்டும்.
சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.
அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு கலந்து தைலமாக காய்ச்சி சருமநோய்களுக்கு தடவலாம்.
வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாகும்.
அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்
- ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. பாம்புடன் சண்டை போட்ட கீரிப்பிள்ளை, அருகம்புல்லை தேடி உண்பதோடு மட்டும் அல்லாமல், அருகம்புல்லை உண்ணும்.
- உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க , இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.
- மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.
அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும்.அருகு போல் தழைத்து வாழ கிடைக்கும் போதெல்லாம் அருகம்புல்லை பயன்படுத்துவோம்!
Most people are not aware of many amazing health benefits of Arugampul & its juicing. Arugampul in English is called as Bermuda Grass. This juice is a great medicine for stomach pain, gastric ulcers, diabetes, anemia, detoxing, cold, nasal congestion, strengthens teeth and bones and even helps for weight loss too.