குழந்தைகளை AC அறையில் தூங்க வைப்பதன் மூலம் காத்திருக்கும் விளைவுகள்…

பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளை ACஅறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தேரிந்துக்கொள்வோமா!!!

வெயிலிலிருந்தும் வியர்வையிருந்தும் தப்பித்துக் கொள்ள அனைவரும் AC-யை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் இதில் மிக முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்றைய பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் கூட AC அறையில் தூங்கவைக்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் வேளைசுமையை குறைக்க இவ்வாறு செய்வதால் வரும், விளைவுகளைபற்றி விரிவாக காண்போம்…

பொதுவாக நாம் AC-யை உபயோகிக்கும்போது , அதன் வெப்பநிலை 26 முதல் 30 DEGREE CELSIUS அளவு இருப்பது நல்லது. இதற்குக் கீழே குறைக்கும் போது ,அறையின் வெப்ப நிலை சாதாரண அளவை விட குறைந்தே இருக்கும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது. அதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவும்.

ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்?

குழந்தைகளை AC வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப AC அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கிறது.

ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?

குழந்தையை AC அறையில் நீண்ட நேரம் வைத்து இருப்பதால் குழந்தையின் உடலில் உள்ள இயல்பான வெப்ப நிலை குளிர்சாதன அறையின் தட்ப வெட்ப நிலைக்கு மாறிவிடும் , அதனால் நாம் குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது , இயற்கையான வெப்ப நிலையை அக்குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாது . இதனால் குழந்தைகளுக்கு மயக்கம் , வெயிலினால் ஏற்படும் நரம்பு பிரச்சனைகள் , தலைவலி, மற்றும் பல விதமான பக்க விலைகள் பின்வரும் காலங்களில் ஏற்படக்கூடும்.

வெப்பத்தால் வியர்வை வரும் போது குழந்தை அழத் தொடங்கும். இது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம். அதனால் பெற்றோர்கள் இயன்றவரைக் குழந்தைகளை AC-க்கு பழக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது. AC அறையில் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடியிருக்கும். வெளிக்காற்று மற்றும் சூரிய ஒளி அறையின் உள்ள வர வாய்ப்புகள் மிகவும் குறைவான அளவே குளிர்சாதனம் வைத்துஇருக்கும் அணைத்து வீடுகளிலும் இருக்கும் . இதனால் குழந்தை சுவாசித்த காற்றையே சுவாசிக்க நேரிடும். போதிய OXYGEN அதில் கிடைக்காது .குழந்தைகளுக்கு இது ஏற்றது அல்ல . சில நேரங்களில் அரை மூடியே இருக்கும் காரணத்தினால் அறையின் உள்ளேயே காற்று இருப்பதால் அது அசாதாரணமான நாற்றத்தை ஏற்படுத்தும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்க படலாம்

இயல்பாக சூரிய ஒளி அறையில் பரவுவது மிகவும் நல்லது. பொதுவாக சூரிய ஒளியியிலிருந்து கிடைக்கும் VITAMIN-D எனப்படும் உயிர்ச்சத்து அனைத்து மனிதருக்கும் மிகவும் அவசியமானது. இது இக்காலத்தில் குளிர்சாதன அறைக்குள்ளேயே இருக்கும் குழைந்தைகளுக்கு குறைவாகவே இருக்கிறது. இதானால் குழைந்தைகளுக்கு பல விதமான உடற்பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது. ஏசி அறையிலிருந்தால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.