எறும்புகளை விரட்டும் சீதா ரேகை!!!

சீதாவிற்க்கு வரைந்த லட்சுமண ரேகையை பற்றிய கதையை ராமாயணத்தில் படித்து உள்ளோம். இதென்ன சீதா ரேகை என்று யோசிக்கிறீர்களா? அதுவும் சீதாரேகையை நாமே வரையலாம்.

சிறு பூச்சிகளால் ஏற்படும் தொல்லையில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும் எனும் போது, பக்க விளைவுகள் இல்லாத கெமிக்கல் பொடிகள் இல்லாத ஒரு வீட்டு தயாரிப்பு தான்.

ரொம்ப பீடிகை போடாமல் தலைப்புக்குள் போவோம்.நம் வீட்டு கொல்லையில் இருக்கும் சீதா பழமரம், கிண்ணத்துக்குள் ஐஸ்கிரீமை நிரப்பி அங்கங்கே கறுப்பு திராட்சையை தூவியது போல காட்சியளிக்கும் ஒரு பழம்.அணில் இரக்கப்பட்டு விட்டு வைத்திருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு கிடைக்கும்.

எளிதில் கிடைக்கும் பழம் என்பதால் நாம் அந்த பழத்தையே சீண்டுவதில்லை. விதை நீக்கி சாப்பிட சோம்பல் வேறு.ஆனால் சுவையும், எந்த பூச்சி மருந்து அடிக்காத சுத்தமான ஆர்கானிக் பழம் சீதா தான். மாவுப்பூச்சிகளைத் தவிர வேறு பூச்சிகள் அண்டி பார்த்துள்ளீர்களா? அதற்கு காரணம் என்ன என்று தேடியுள்ளீர்களா?

ஆடுகள் கூட சீதா இலைகளை தின்னாது ஏனெனில் அவ்வளவு விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

சீதாப்பழத்து விதைகள் கூட விஷத்தன்மை கொண்டது. “எல்லா மருந்தும் மருந்தல்ல, எல்லா விஷமும் விஷமல்ல”, என்பதை கருத்தில் கொண்டு சீதாப்பழ விதைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்.

சீதாப்பழ விதையின் பயன்கள்

  • சீதாப்பழ விதைகளை பவுடராக்கி நீரில் கரைத்து செடிகளுக்கு ஸ்பிரே செய்யலாம். செடிகளுக்கு பூச்சிகளில் இருந்து விடுதலை.
  • சீதாப்பழ விதையின் பவுடரை எறும்புகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் தூவலாம்.
  • பேன் தொல்லை நீங்கும்.

பள்ளி, கல்லூரி, விடுதியில் தங்கி பயிலும் பிள்ளைகளின் தலையில் பேன் தொல்லை என்பது பெரும்பாடு. சந்தையில் கிடைக்கும் அனைத்து பேன்கொல்லி மருந்துகளும் கொடிய விஷம். தவறுதலாக கண்களில் பட்டால் கூட கடும் விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கையுடனே விற்பனைக்கு வருகிறது.

இதற்கெல்லாம் தீர்வாக சீதாப்பழ விதைகளை பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்து விடவும். தினசரி தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்து வரவும். எந்தவித வாசனையும் வராததால் எண்ணெய் தேய்த்தவுடன் தலைக்கு குளிக்கும் அவசியம் இல்லை.

இதற்கும் பக்கவிளைவுகள் உண்டு என்ன, பாஸிட்டிவ் பக்கவிளைவுகள் தலையில் பொடுகு தொல்லை நீங்கி, கூந்தலும் கருமையாக அடர்த்தியாக வளரும்.

நடந்து பார்த்தால் நாலும் புரியும் என்பதைபோல நம்மைச்சுற்றி உற்று நோக்கினால், தாவரங்களும், விலங்குகளும் நமக்கு நன்மை அளிப்பதோடு நமக்கு பாடங்களும் நடத்துகிறது. நமக்கு தான் எதற்கும் நேரமில்லை என்று ஓடுகிறோம், ஓடிக்கொண்டே இருக்கிறோம்.


Custard apple seeds can be used to remove lice and nit from the hair. Custard apple contains vital nutrients like iron, magnesium, vitamin A and phosphorus, which can benefit the hair in multiple ways that includes hair growth. Powdered custard apple seeds mixed with water helps plant free from insects(ants, cockroach, etc). Present study recommended using this oil as Eco-friendly bio-pesticide an alternative to the synthetic pesticide.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.