உணவில் நெய் சேர்ப்பதை தவிர்க்காதீர்கள்!

நெய் என்றாலே கொழுப்பு மிகுந்த, உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நமது பொதுப்புத்தியில் தவறாக சொல்லி வைத்துள்ளார்கள்.

இந்தியாவில் உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

நெய்யின் சுவையும், மணமும் விரும்பினாலும், நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய்யை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.

நெய் ஏன் நல்லது?

தினசரி உணவில் குறைந்தபட்சம் 10 சதவீதமாவது கொழுப்பு சத்து தேவை. நெய்யில் உள்ள கொழுப்பானது saturated fat வகைக்குள் அடங்கும். நெய்யில் சோடியம், கார்ப்போஹைட்ரேட், புரதம் எதுவும் இல்லை. ஒரு டேபிள் ஸ்பூன் நெய் 135 கலோரி மதிப்பு உள்ளது. நெய் உடல் எடை குறைக்க உதவும். ஆனால் நெய்யை எவ்விதம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து தான்.

  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.
  • நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை உள்ளது. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.
  • நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
  • வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் உராய்வு ஏதுமின்றி நன்கு இயங்குவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • லாக்டோஸ் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.

குறிப்பு :

இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் அவர்களது நோயின் தீவிரம் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி நெய் சேர்த்து கொள்வது நல்லது.


Ghee(Clarified Butter) made from butter of Pastured cows serves as a natural source of CLA. It is used in Indian foods that adds extra taste. It has several health benefits than butter. It is enriched with antioxidants and vitamin A, D, E and K. One tablespoon (15g) of ghee has approximately 135 calories. It helps to strengthen bones and immune system, promotes healthy weight loss as it contains omega 3 and 6. On applying ghee to dry skin, face becomes healthy and glowing. It helps chapped lips to turn soft. It provides healthy saturated fat to the body. It helps to promote digestion and lower inflammation. It promotes hair growth on massaging scalp along with coconut oil.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.