முட்டை ஓடை குப்பையில் போடாதீர்கள்!

இறைவனின் படைப்பில் எதுவும் வீண் இல்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மறுமதிப்பீடு உள்ளது. அந்த பொருளின் தேவையும் அதன் மதிப்பும் தான் அதனை வீணடிக்க தோணாது.

கோழிமுட்டை ஓடுகள் கால்சியம் கார்பனேட்டால் ஆனது. முட்டையின் உள்ளே உள்ள மஞ்சள், வெள்ளை கருவை உணவாக எடுத்துக் கொண்டு, ஓடுகளை குப்பையில் போடுவோம். வெகுசிலர் மற்றும் முட்டை ஓடுகளை தோட்டத்தில் செடிகளுக்கு உரமாக போடுவார்கள். முட்டை ஓடுகளின் பயன்களைத் தெரிந்தால் பக்கத்து வீட்டு முட்டை ஓடுகளையும் சேகரித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரலாம்.

முட்டை ஓடுகளை உண்ணலாமா?

நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்து, பவுடர் ஆக்கிய முட்டை ஓடுகளை, நமது கால்சியம் தேவைக்காக உட்கொள்ளலாம். கால்சியம் பற்றாக்குறைக்கு சரியான தீர்வு முட்டை ஓடுகள் தான். ஆஸ்டியோ போரோஸிஸ், எலும்பு தேய்மானத்தில் இருந்து விடுபட கால்சியம் தேவை. எலும்புகளின் வளர்ச்சிக்கு, இதயத்துடிப்பை சீராக்க, மக்னீசியம், பல் எனாமல்களை பாதுகாக்க, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துகளின் அளவுகளை சீராக்கவும் கால்சியம் தேவை. விலை இல்லாத, எளிதாக கிடைக்கும் முட்டை ஓடுகளின் கால்சியம் பக்கவிளைவுகள் இல்லாதது.

கௌபாய் காபி

முட்டை ஓடுகள் காரத்தன்மை (alkaline) கொண்டது, காபியானது அமிலத்தன்மை (acidic nature) வாய்த்தது. அமிலத்தன்மையாலே காபியில் கசப்பு சுவை. இந்த கசப்பு தன்மையை குறைக்க கௌபாய் காலங்களில் முட்டை ஓடுகளை காப்பியுடன் சேர்த்து கொதிக்க விடும் போது அமிலத்தன்மை குறைந்து காப்பியின் சுவை கூடும்.

ஸ்மூத்தியில் முட்டை ஓடு பவுடர்

பழம், காய்கறிகள் கொண்டு தயாரிக்கும் பானமான ஸ்மூத்தியில் கால்சியம் பவுடரை சேர்த்து குடிக்கும் போது தினசரி தேவையான அளவு கால்சியம் உணவின் மூலமாக கிடைக்கிறது.

முட்டை ஓடுகளை மிகச்சரியான முறையில் சுத்தப்படுத்தி கிருமிகள் இல்லாமல் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு தான் உட்கொள்ள வேண்டும். ஈ.கோலி, சல்மோனிலா டைபி போன்ற கிருமிகள் பச்சை முட்டை ஓட்டில் இருக்கும்.


Simply Crush the egg shell and powder it to attain its health benefits. Eggshells may be a useful source of dietary calcium when the powder is mixed with fruit and veg smoothies. It provides high nutrition content to the body. Egg shells along with egg white keeps skin and hair healthy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.