ஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்

தினமும் காலையில்  எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்களில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. 

ஜப்பானிய நீர் சிகிச்சையில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை மிகவும் நல்லது என்றும் குறிப்பாக வயிறு சுத்தமாவதால் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராகிறது என்கிறார்கள். காலை நேரம் தான் நீர் அருந்துவதற்கு ஏற்ற,”கோல்டன் அவர்”, என்கிறார்கள்.ஒவ்வொரு முறையும் உணவிற்கு பிறகு நீர் அருந்தவேண்டாம் ஏனெனில் ஜீரண அமிலங்களை நீர்த்து போக வைப்பதால், ஜீரணம் தாமதமாகும்.

கவனிக்க வேண்டியவை

  • தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. 
  • இரவு படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய காப்பி,  டீ, மதுபானம் அருந்துதல் கூடாது.
  • இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.
  • முதல் நாள் இரவே தண்ணீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி பருகலாம். சுடுதண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே.
  • முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் என் பருக ஆரம்பிக்க வேண்டும்.
  • ஆரம்பகாலத்தில் சிரமமாக இருக்கும் பிறகு பழகி விடும்.

நீர் சிகிச்சையின் நன்மைகள்

தலைவலி,இரத்த அழுத்தம், இரத்த சோகை, ஊளைச்சதை, மூட்டுவலி, நீரிழிவு நோய், கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், பித்தக் கோளாறுகள், வாயுக்கோளாறுகள், மலச்சிக்கல் என ஒட்டுமொத்த உடல்கோளாறுகளுக்கும் காரணமான நச்சுகள் வெளியேறுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது, மேலும் மெட்டபாலிசத்தை தூண்டுவதால் உணவு செரிமானம் சீராகும்.


Drinking sufficient water boosts your metabolism and helps the body properly break down food. Water is a detoxifier that helps to flush out toxins and get rid of waste primarily through sweat and urine. Headaches and migraines are often caused by dehydration. So, to get some relief, drink plenty of water. You may have heard that you should aim to drink eight 8-ounce glasses of water per day. How much you should actually drink is more individualized than you might think. The Institute of Medicine (IOM) recommends that men drink at least 101 ounces of water per day, which is a little under 13 cups. “Drinking too much fluid can lead to hyponatremia, which is when sodium in blood becomes too diluted,” Sims says. Symptoms include confusion, headaches,nausea and bloating,stuff that’s easily confused with dehydration. In severe cases, hyponatremia can lead to seizures, organ failure and even death.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.