இடுப்பைச் சுற்றியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க இந்த ஒரு ஆசனம் போதுமாம்!

கொடியிடை போல இடையை பெற இந்த ஆசனத்தை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். இடுப்பைச் சுற்றி படிந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்துவிடுகிறது. இதை தொடர்ந்து செய்து வர வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்ச்சி பெற்று, வயிற்றுத் தசைகளும் பலம் பெறுகிறது.

பெயர் விளக்கம்:

“உத்தித” என்றால் மேலே தூக்கிய சாய்வான என்று பொருட்படும் . “மேருதண்ட” என்றால் முதுகெலும்பு என்று பொருள். இந்த ஆசனத்தில் தரையிலிருந்து முதுகை மேலே தூக்கி சாய்வான நிலையில் வைத்திருப்பதால் உத்திதமேரு தண்டாசனம் என்று கூறப்படுகின்றது.

Best Fitting Yoga Pants ₹ 297.00

செய்முறை விளக்கம்:

 • தரை விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும்.
 • குதிகால்களை சேர்த்துகால் விரல்களை அகற்றி வைக்கவும்.
 • கைகளை பக்கவாட்டில் நீட்டிவைக்கவும்.
 • உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்க வேண்டும்.
 • தலை எந்தப் பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும்.
 • தலைஎந்தப் பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும்.
 • தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும். இடது, வலது உடல் பாகம் சமமாக தரை விரிப்பின் மேல் பதிந்து இருக்க வேண்டும்.
 • மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும்.
 • கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும்.
 • உடல் முழுவதையும் தளர்வாகவைத்துக் கொள்ள வேண்டும்.
 • இந்நிலைக்கு ‘சவாசனம்’ என்று பெயர் இந்த ஆசன நிலையில் சில வினாடிகள் ஓய்வாக இருக்க வேண்டும்.
 • அதன் பிறகு கைகளை தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும்.
 • உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும்.
 • கால்கள் இரண்டையும் சேர்த்து வைக்க வேண்டும்.
 • மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

கைகளில் இருந்து இடுப்புவரை உள்ள உடல் பகுதியைமேலே தூக்கி 40 அல்லது 45 டிகிரிகோணஅளவில் நிறுத்தி மூச்சை வெளியே விட வேண்டும்.

 • கால்களுக்கு முன்னால் கைகள் நேராக இருக்கட்டும்.
 • முதுகை சாய்த்து நேராக வைக்க வேண்டும்.
 • உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும்.

இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 10 முதல் 30 வினாடி வரை இருந்து பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி மல்லாந்து படுத்து மூச்சை வெளியே விடவும். அதிலிருந்து சவாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்ய வேண்டும்.

Yoga Asana in Tamil
Fitness Mantra Yoga Mat ₹ 345.00

கவனம் செலுத்த வேண்டிய இடங்கள்

அடிவயிறு, இடுப்பு பகுதிகள் மீதும் அல்லது மணிப் பூரச்சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

பயிற்சிக் குறிப்பு: ஆரம்ப பயிற்சியில் கால்களை நீட்டி உட்கார்ந்த நிலையில் இருந்து பின்னோக்கி சாய்ந்து உத்தித மேரு தண்டாசனம் பயிலலாம்.

தடைக் குறிப்பு: இடுப்புவலி, இடம் விலகிப் போன டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பயன்கள்: தொந்தி வயிற்று சதைகள் குறைந்து, முதுகு தண்டு மற்றும் வயிற்றுத் தசைகள் பலம் பெற்று, வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற நாள்பட்ட கொழுப்பை அற்புதமாக கரைத்து விடும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.