பழைய சோற்றில் பாக்டிரியா இருக்கா? இத தெரிந்துக்கொக!

பழைய சோறும் பச்சைமிளகாய், நீராகாரத்தில் மோரும் இரண்டு உப்புக் கல் போட்டு, இரண்டு சொம்பு குடித்து விட்டு வயக்காட்டுக்கு போன காலத்தில் ஒரு வியாதியும் அண்டவில்லை. டீயுடன் ஆரம்பித்த காலைகள் நோயுடன் முடிகிறது இன்று.

பழைய சோற்றில் அப்படி என்னத்தான் இருக்கு என்று இளக்காரமாக நினைக்க வேண்டாம். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது வியந்து தான் போனார்கள்.

பழைய சோறு ஒரு ப்ரோ பயாடிக் (probiotic) உணவு

ப்ரோ பயாடிக் (probiotic) என்பது ஒரு பாக்டிரியா ஆனால் அதில் உள்ள ஈஸ்ட் ப்ரோ பயாடிக் ஆக பணிசெய்கிறது. ப்ரோபயாடிக் எல்லா புளித்த உணவுகளிலும் இயற்கையாக உள்ளது. உ..ம் பழைய சோறு, தயிர்

பழைய சோற்றில் உள்ள பாக்டிரியாக்கள் உணவுக்குழாயிலிருந்து இரைப்பை வரை உடலுக்கு கெடுதல் செய்யும் பாக்டிரியாக்களை அழிக்கிறது. அதேசமயம் நன்மை தரும் பாக்டிரியாக்களை தூண்டுகிறது.

உதாரணமாக தயிரில் உள்ள ப்ரோபயாடிக் – Lactobacillus and Bifidobacterium. நமக்கு நன்கு தெரியும் வயிற்றுக்கு சரியில்லை என்றால் மோர்சாதம் சாப்பிட சொல்வார்கள் பெரியவர்கள்.

பழைய சோறினால் நன்மைகள்

  • வயிற்றில் உள்ள அல்சர் புண்களை குணப்படுத்தும்.உணவு செரிமானத்தை தூண்டி, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சி எடுக்க உதவுகிறது.
  • மலக்குடலின் pH அளவுகளை குறைக்கிறது ஆகவே மலக்கழிவுகள் வெளியேற தூண்டுகிறது.
  • அமாக்ஸலின் போன்ற ஆன்டி பயாடிக் மாத்திரைகளின் பக்கவிளைவாக வயிற்று போக்கு ஏற்படும் போது பழைய சோறு குணமாக்குகிறது.
  • உணவில் உள்ள புரதம், விட்டமின்களை குடலுறிஞ்சிகள் உறிஞ்ச உதவுகிறது.

ப்ரோ-ப்யாடிக் பக்க விளைவுகள்

மருத்துவ ஆலோசனையின்றி ப்ரோபயாடிக்கை மாத்திரைகள் வடிவில் எடுத்துக் கொள்ள கூடாது.

இரவில் மண்பானையில் மீந்த சோறுடன் கல்உப்பு போட்டு வைக்கவும். காலையில் புளித்த பழைய சோற்றில் அல்லது நீரில் மோர் கலந்து குடித்தால் சொர்க்கம் நம் கையில் தான்.


Pazhaya Soru(Fermented rice) or Rice Porridge is made using left over (remained) rice. Availability of nutrients are manifold on fermenting the rice. Water added to the cooked rice, left untouched and soaked overnight. Next day morning it is mashed with ladle by adding salt and curd or butter milk. Chopped onion, green chillies and corriander leaves are also added to the rice porridge or pazhaya soru. It is a probiotic food. Naturally formed bacteria helps in digestive process and keeps body cool. We can name it also as Neeragaram. It helps to absorb proteins and vitamins in the food.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.