எவருக்கும் எளிதாக கடைப்பிடிக்கக்கூடிய சர்க்கரை நோய்க்கான டயட்!

சர்க்கரை நோயாளிகளுக்கு எதைசாப்பிடுவது என்ற குழப்பமும், தீவிரமாக டயட்டில் இருப்பவர்களுக்கு உணவு மீது எப்போதும்  ஒரு ஆர்வம் இருந்துக்கொண்டு இருக்கும். Food craving எனும் உணவின் மீதான ஆசையால் கடைப்பிடித்து வந்த டயட்டை எளிதில் மீறுவார்கள். இதனை தவிர்க்க வயிறு நிரம்பும் அதேசமயம் சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும். விலை குறைவாக நமக்கு எளிதாக கிடைக்கும் உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு உணவுத் திட்டத்தைப் பார்ப்போம்.

காலையுணவு

டீயில் சர்க்கரை, பால் சேர்த்தும் போது அது கலோரி மதிப்பு அதிகமாகவும் அதேசமயம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாகிப்போகிறது. ஆகவே சர்க்கரையில்லா டி மற்றும் நான்கு முட்டைகள் மஞ்சளுடன் சாப்பிடவும்.

மதியம்

அரிசி உணவைத் தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த நாட்டுரக காய்கறிகளை பொரியல், பச்சடி போல சமைத்து சாப்பிடலாம். வயிறு நிறையும் வரை சாப்பிட வேண்டும். அத்துடன் ஒரு கப் தயிர் சாப்பிடலாம். கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் தயாரான தயிர் என்றால் நல்லது.

மாலை

சர்க்கரையில்லா பாலில்லா டி.

இரவு

  • வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வேகவைத்த பச்சைப் பயிறு /சுண்டல் தாளித்து அல்லது தாளிக்காமல் ஒரு கப் எடுத்து கொள்ளவும்.
  • மதிய உணவாக காய்கறிகள் உண்பது கடினம் என்றால், அதை இரவிற்கு மாற்றி, மதியம் வழக்கமான சாப்பாடு சாப்பிடலாம்.  
  • நொறுக்கு தீனிகளும், பொரித்த உணவுகளும் அறவே கிடையாது. இதில் பொறுமையும் மனக்கட்டுப்பாட்டும் மிகவும் முக்கியம்.

இந்த வகை டயட்டால் கிடைக்கும் நன்மைகள்

  • விலை மலிவான அதேசமயம் இல்லத்தரசிகளுக்கு வேலை குறையும்.
  • இந்த கார்போஹைட்ரேட் குறைவான  டயட் தொடர்ந்து எடுக்கும் போது ரத்த சர்க்கரை அளவுகள் நன்றாக குறையும். 
  • சர்க்கரை நோயாளிகளுக்கு  வரும் கொலஸ்டிரால், பிரஷர், சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு வெகுவாக குறைந்து விடும்.
  • சர்க்கரை நோய் கட்டுப்படும் போது மருந்துகள் செலவுக்குறையும்.

You can lose weight with a high-fiber diet made up of the right kinds of fruits, vegetables, proteins, and whole grains. But you have to give up refined sugar and flour and make other tweaks to the way you eat.  You can’t follow a typical low-fat, high-carb diet if you’re following Sugar Busters. Because low-fat foods are often high in refined sugars. The diet requires you to get 30%-40% of calories from fat. But you should eat low-fat dairy products and lean cuts of meat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.