ஆரோக்கியத்தில் மூதாதையர் தானியங்களின் பங்கு

மனிதன் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது வேட்டையாடுதல் என்ற நிலையில் இருந்து விவசாயம் தொழிலாக மாறும் போது பயிரிட்ட தானியங்களையே பழமையான தானியங்கள் என்கிறோம்.

Pseudocereal:

புல் வகைகள் அல்லாத தாவரங்களில் இருந்து கிடைக்கும் தானியங்கள் இவை. இதன் பயன்பாடு கிரேக்க, எகிப்து நாகரிகத்தின் போதிருந்தே உள்ளது. நெல், கோதுமை போன்று பல்வேறு பரிமாணங்கள் அடையாமல் இன்றும் உபயோகத்தில் உள்ளது. அவை:

Quinoa, millet, sorghum, amaranth, teff, freekeh, chia seeds, farro, spelt and Kamut all qualify as ancient grains.

மேற்கண்ட வற்றுள் கடைசி மூன்றைத் தவிர அனைத்தும் க்ளுட்டன் இல்லாத தானியங்கள். இவற்றில் அமராந் எனும் ராஜ் கீராவைப் பற்றி பார்ப்போம்.

ராஜ்கீரா விதைகள்:

அமராந் (Amaranth) எனும் கீரை விதைகள் அதிக அளவு கால்சியம் மற்றும் அத்தியாவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நூறு கிராம் ராஜ்கீரா வெறும் 371 கலோரிகள் அளவே கொண்டது. க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு அருமையான மாற்று. இன்றும் பாடிபில்டர்களுக்கு இதில் புரோட்டின் அதிக அளவில் உள்ளதால் அமராந்த் லட்டுகள் உணவில் வழங்குகின்றனர்.

சைவ உணவபழக்கம் உடையவர்கள் புரோட்டின், கால்சியம் தேவைகளுக்கு இதனை ஏதோவொரு வகையில் உணவாக உட்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது. நாப்பது வயதை கொண்டவர்களும், மெனோபாஸ் பருவத்தை கடந்தவர்களோ என எல்லா பருவ பெண்களும் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆஸ்டியோபோரோசிஸ அதிகரிக்கும் இன்றைய காலகட்டத்தில் இதன் தேவை அதிகம். எடைக்குறைப்பில் நார்ச்சத்து நிறைந்த ராஜ்கீரா சிறந்த உணவு.

கோதுமையை எப்படி எல்லாம் பயன்படுத்துவோமே அப்படி எல்லாம் அன்றாட வாழ்வில் உணவாக உட்கொள்கின்றனர். ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் என்ற அளவில் கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி, பூரி, பரோட்டா வாக சமைக்கலாம். கூழ், தோசை, பாப்கார்ன் போன்று பொரித்து சாலடில் கலந்து உண்ணலாம். நீண்டநேரம் பசி தாங்கும். சுவைப்பழகியதும் ராஜ்கீராவை தனியே பயன்படுத்தவும்.

பெரும்நகரங்களில் அனைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது. என்னைப்போன்று சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு அமேசான் வரப்பிரசாதம்.


Millets are our traditional cereals that were used in cooking by our ancestors. Millets contains multi-nutrients like calcium, proteins, iron, essential minerals and very little carbs. There are so many types of millet. It is also easily available in many stores near us. Try to include millets into food diet it helps to prevent many diseases.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.