ஆர்த்தரிடிஸ் நோயாளிகளுக்கு ஏற்ற பசுமஞ்சள் சூப்!

“Indian saffron”, என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மஞ்சளானது மூவாயிரம் வருடங்களாக இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அளப்பரிய பயன்களால் தான் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதோ என்னவோ!

ஆர்த்தரிடிஸ் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த வலி நீக்கியாக செயல்படுவது மஞ்சள் என்றால் மிகையாகாது. டை க்ளோ பினாக் வலி நிவாரணி மாத்திரைகளையும், மஞ்சளையும் இரு குழுவினருக்கு கொடுத்து சோதித்ததில், மஞ்சளை மருந்தாக எடுத்தவர்களுக்கு வீக்கம் குறைந்து வலி இல்லாமல் இருந்தார்கள். ஏனெனில் மஞ்சளில் உள்ள Curcumin வீக்கத்தீற்க்கான என்சைம் மற்றும் சைட்டோ கைனின்கள் தடுக்கிறது. மேலும் மூட்டுகளில் ஏற்பட்ட புண்களை ஆற்றும். ஆகவே ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் தினசரி உணவில் மஞ்சளை நிறைய சேர்க்கவும்.

பசும் மஞ்சள் சூப்

தேவையான பொருட்கள்

 • பசும் மஞ்சள் – சிறிய துண்டு 
 • கற்பூரவள்ளி இலைகள் – 4 
 • துளசி இலைகள் – 10 
 • சீரகம் – 1/2 டீஸ்பூன்
 • மிளகு – 4 
 • பூண்டு – 2 பல் தோலுரித்தது
 • சின்ன வெங்காயம் – 3
 • தண்ணீர் – ஒரு லிட்டர் 
 • உப்பு – தேவையான அளவு 

செய்முறை

 • பசும் மஞ்சளைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். 
 • அதனுடன் கற்பூரவள்ளி, துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைக்கவும். 
 • பாத்திரத்தில் ஒரு லிட்டர்அளவு தண்ணீருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். 
 • தண்ணீர் கொதித்து முக்கால் லிட்டர் அளவில் குறைந்த பிறகு இறக்கவும்.
 • தேவையானபோது லேசாக சூடாக்கி உப்பு சேர்த்துப் பருகலாம். 
 • இந்த சூப் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குறைந்த அளவு சூப் செய்து அவ்வப்போது பருகி வரலாம்.

Turmeric purifies the blood and brings translucence to your energies. Turmeric not only works on the physiology, but also has a big impact on your energy system. It purifies the blood, body, and energy system. For external purification, just take a small pinch of turmeric, put it into a bucket of water and pour it over your body – you will see, the body will be vibrant and glowing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.