உடல் எடை குறைத்து, ஆரோக்கியமாக இருக்க உதவும் ஸ்மூத்தி

உடல் எடை குறைய, உடல் நச்சுக்களை குறைக்க அதாவது Detox செய்ய ஸ்மூத்தி பருகியதாக பலரும் கூற நாம் கேட்டதுண்டு. ஸ்மூத்தி என்றால் என்னவென்று பார்ப்போம்!

ஸ்மூத்தி என்பது அரைத்த காய்கறி, பழகலவை ஆகும் இதனுடன் இயற்கை இனிப்பூட்டிகளான தேன், பேரிச்சை, ஸ்டீவியா உடன் பால் அல்லது தயிர் மற்றும் உலர்விதைகள், உலர் தானியங்கள் சேர்த்து பருகும் பானம்.

பழச்சாறு என்பது பழங்களின் தோல், விதைகளை சக்கையென்று நீக்கி விட்டு பருகுகிறோம். வெறும் பழச்சக்கரையான ப்ரக்டோஸ் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது தான் பழச்சாறு. ஆனால் ஸ்மூத்தியில் நார்சத்து,
தாதுக்கள், விட்டமின்கள் என உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளது.ஏனெனில் கழிவு என்று எதையும் நாம் வீணடிப்பதில்லை.

ஸ்மூத்தியின் சேர்க்கப்படும் சேர்மானங்களை பொறுத்தே அது ஒரு வேளைக்கான சரிவிகித உணவாக மதிப்பிடப்படுகிறது.

பழச்சாறு என்பது பழங்களின் தோல், விதைகளை சக்கையென்று நீக்கி விட்டு பருகுகிறோம். வெறும் பழச்சக்கரையான ப்ரக்டோஸ் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. ஆனால் ஸ்மூத்தியில் நார்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்து உள்ளது. ஏனெனில் கழிவு என்று எதையும் நாம் வீணடிப்பதில்லை. ஸ்மூத்தியின் சேர்மானங்களே அது ஒரு வேளைக்கான சரிவிகித உணவாக மதிப்பிடப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள், கீரைகள், உலர் பழங்கள், உலர் விதைகள், தாவரப் பால் வகையில் வரும் சோயாப்பால், தேங்காய் பால், நிலக்கடலை பால் மற்றும் இனிப்பூட்டிளான தேன், ஸ்டீவியா, ஸிரப்புகள் இவற்றோடு பால் பொருட்களான பால், தயிர், சீஸ் வகைகள் கொண்டு அரைக்கப்பட்ட கலவை. சாக்லேட் சிப்ஸ்கள், ஐஸ்கிரீம் சேர்ப்பவர்களும் உண்டு. தனிநபரின் ருசி, ரசனை அவரது நோக்கம் சார்ந்தது தான் ஸ்மூத்தி தயாரிப்பு சேர்மானங்கள்.

1930 ல் அமெரிக்காவில் உள்ள ஒரு ஹெல்த் ஸ்டோரின் கண்டுபிடிப்பு இன்று உலகெங்கும் பரவிய ஆரோக்கியபானம்.

நம் இந்தியாவில் கூட ஸ்மூத்தி சாயலில் “பஞ்சாப் லஸ்ஸி”, உள்ளது. இந்துப்பு, மஞ்சள் தூள், இஞ்சி சேர்ந்த ஸ்மூத்திகள் இந்நியமயமாக்கப்படுகிறது.

ஸ்மூத்தியின் பயன்கள்:

1. எளிமை மற்றும் உடனடியாக தயார் செய்யும் செய்முறை.

2. ஒரு நாளுக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவு.

3. உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4. சருமத்திற்க்கு பளபளப்பும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுவதால் இளமையான தோற்றத்திற்கு உறுதி.

5. மலச்சிக்கல் நீங்கும், செரித்தலை தூண்டும்.

6. உடலில் தேங்கிய கழிவுப் பொருட்களை அகற்றும்.

7. உடலின் உள்ளுறுப்புகள் நன்கு செயலாற்றுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. நல்ல உறக்கம், ஆரோக்கியமான மனநிலை, சுறுசுறுப்பு கூடுவதால் செயல்திறன் கூடுகிறது.


Key to healthy weight loss is following healthy eating. Including more watery foods like soups, fruit juices, smoothies, herbs infused water etc, helps to lose water faster. Add this simple and tasty weight loss smoothie in your daily weight loss diet routine. It helps for body detoxification, fat burning and results in excellent weight loss if followed consistently.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.