இனி வீட்டுலே தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம்! ரொம்ப ஈசி!

தினசரி சமையலுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும், சருமப்பராமரிப்புக்கும் என்று தேங்காய் எண்ணெய் நம் வாழ்வில் ஐக்கியமாகி விட்டது. தேங்காய் எண்ணெய் வியாபாரமாகி சந்தைக்கு வரும் முன் வீடுகளில் அவரவர் தேவைக்கு சிறிய அளவில் நமது பாட்டிகள் செய்துள்ளனர்.

இன்றும் கேரளா போன்ற பாரம்பரியத்தை போற்றும் இடங்களில் அவரவர் தேவைக்கு எண்ணெய் அரைத்து கொள்கிறார்கள். எந்தவித கெமிக்கலும் பிரிசர்வேடிவும் இல்லாத தூய எண்ணெய் சாத்தியம். “விர்ஜின் “, தேங்காய் எண்ணெய்க்கு ஈடானது தான் இந்த எண்ணெய்.

விர்ஜின் தேங்காய் எண்ணெய் : 

தேங்காய்களை காயவைத்து செக்கில் ஆட்டும் போது “ஹாட் ப்ராசெஸ்”, எனும் முறையில் தான் எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த முறையில் எண்ணெய் சூடாகுவதால் அதன் நறுமணமும், சத்துக்களும் குறைகிறது.

விர்ஜின் தேங்காய் எண்ணெயில் விட்டமின் ஈ, தாதுக்கள், மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் தேங்காய் எண்ணெயில் இயற்கை நறுமணமும், கெடாமல் நாள்பட இருக்கும்.

வீட்டிலே தேங்காய் எண்ணெய் செய்வது ஒன்றும் பெரிய ராக்கெட் சூத்திரம் இல்லை. இன்றைய நவீன  இயந்திர காலத்தில் முயன்றால் எதுவும் சாத்தியமே!

வீட்டில் தேங்காய் எண்ணெய் செய்ய நன்கு விளைந்த தரமான தேங்காய், எண்ணெய் காய்ச்ச அடிகனமான வாணலியை ஏற்பாடு செய்து கொள்ளவும்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் – 3 லிருந்து 5

செய்முறை :

1. தேங்காய்களை உடைத்து துருவிக்கொள்ளவும்.நன்கு  நைசாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

2. அரைத்த தேங்காய் விழுதை பிழிந்தெடுத்தால் தரமான தேங்காய் பால் 1 லிட்டர் கிடைக்கும்.

3. தேங்காய் பாலை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

4. அடிகனமான வாணலி / உருளியில் பாலை விட்டு அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

5. மெல்ல பாலில் உள்ள நீர் வற்றி வரும் போது அடிபிடிக்காமல் கிளறவும்.

6. பிரௌன் நிறமாகும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

7. ஆறிய பின் கசடுகளை நீக்கி, மஸ்லின் துணியில் வடிகட்டவும்.
சுத்தமான, நறுமணம் வீசும் தேங்காய் எண்ணெய் தயார்.

அந்த கசடுகளை வீணாக்காமல் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். பண்டையகால தின்பண்டங்கள் வீட்டுக்குள்ளே இருந்து தயாரானவை தான்.

1 லிட்டர் தேங்காய் பாலுக்கு ஐம்பது மில்லி தேங்காய் எண்ணெய் கிடைக்கும்.ஒரு வருடம் வரை சேமிக்கலாம்.முகத்தில் தடவ, தலைக்கு எண்ணெய் காய்ச்ச என சிறிய அளவில் நமது தேவைக்கு செய்து பார்க்கலாம்.

மனமிருந்தால் தேங்காய் எண்ணெய் உண்டு!


Coconut oil is an edible oil extracted from the meat of mature coconuts. Virgin coconut oil has nice fragrance, taste and antioxidant property and it can be used as natural skin moisturizer. Coconut oil is the mostly used oil in kerala for cooking anad it is a suitable oil for hair and skin care. It can be prepared either by hot process or cold pressed method. Without much effort, coconut oil can be prepared easily by following the above steps.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.