எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

எவ்வளவு தன்னம்பிக்கையும், உத்வேகமும் நிறைந்த ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களது மனதைப் பாதித்து புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும், உடலும் மனமும் ஒருங்கே சோர்வுறும். நாளடைவில் நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எளிதில் தோன்றாது. கிடையாது, முடியாது, வராது என எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சொல்லால் நிறைந்து இருக்கும் நமது பேச்சும் செயலும். நேர்மறை எண்ணங்களுக்கு இருக்கும் சக்தியை போல எதிர்மறை எண்ணங்களும்  ஆற்றல் மிக்கது. எதிர்மறை எண்ணங்கள்  மிகும் போது அதிலிருந்து மீள என்ன செய்வது என்று பார்ப்போம்.

தியானம்

தியானம் என்பது இறைநம்பிக்கை கொண்டதாக இருந்தாலும் வாழ்வின் மீதான பயத்தையும், அவநம்பிக்கையை யும் போக்கி உங்கள் வாழ்வினை மனநிம்மதி உடன் வாழ வழிவகுக்கும்.

புன்னகை புரியுங்கள்

“இடுக்கண் வருங்கால் பகுதி”, என்ற வள்ளுவர் வாக்குக்கேற்ப துன்பமான நேரங்களில் சிரிப்பது அதாவது அதனை எளிதாக கடப்பது என்பதே இதன் பொருள். நகைச்சுவை சேனல் பார்த்து மனதை இலகுவாக்குங்கள். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

நண்பர்களை தேர்ந்தெடுங்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள் மேலும் நம்பிக்கை அளித்து வழிகாட்டுவார்கள்.

நேர்மறை எண்ணங்கள் நிலவட்டும்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை தவிர்த்து, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்பதோடு மாற்று வழிமுறைகள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

குறை பேசாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை.

இயன்றபோதெல்லாம் உதவுங்கள் 

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி  செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

நடந்தவை அனைத்தும் நன்மைக்கே

நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர் கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

இசை

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.இன்னிசையை ரசிக்க ஆரம்பியுங்கள்.

நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றி கூறுங்கள். 

நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். எண்ணங்கள் நல்லனவாக இருக்கும் போது செயலும், சொல்லும் நல்லதாகவே இருக்கும்.


People often try many different ways to get rid of their negative thoughts, including distractions, diversions or ‘drowning their sorrows’ only to later mentally beat themselves up for being still stuck in their negativity. It can feel like a real internal battle. These are common strategies that attempt to stop the thoughts and numb the pain in the short term but they only make things worse in the long term. It doesn’t fix the problem at its core. The conscious part of our mind is responsible for logic and reasoning, and a good portion of your negative thoughts. Negativity that wells up inside of you or in the world around you can quickly become toxic and hold you back from living the life you want.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.