புற்றுநோயை தடுக்கும் பச்சை ரத்தம்!

உலகில் சூப்பர் உணவு (super food) பட்டியலில் கோதுமை புல் சாறு இடம் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இதில் உள்ள 70% குளோரோஃபில் கோதுமை புல் சாறுக்கு பச்சை நிறம் அளிக்கிறது. மனித உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கோதுமை புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

ஒரு மனிதனுக்கு தினசரி தேவையான ஊட்டச்சத்துக்கள் அளவை விட (high percentage daily value) இரு மடங்கு கோதுமை புல் சாறில் உள்ளது. ரிபோப்ளேவின், மாங்கனீசு, விட்டமின் பி6, விட்டமின் ஈ, நியாசின், தயமின், பான்டோதெனிக் அமிலம், துத்தநாகம், காப்பர், விட்டமின் சி, செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து விட்டமின் பி12….. என்று பட்டியல் நீள்கிறது.

கோதுமை புல் வளர்ப்பு

  • நல்ல தரமான கோதுமையை நல்ல சுத்தமான தண்ணீரில் ஊறப் போட்டு, பின்பு அதை எடுத்து ஒரு ஈரத் துணியில் இறுக முடிந்து தொங்க விட்டு விடுங்கள்.
  • 12 மணி நேரம் கழித்து பார்த்தால் கோதுமை முளை கட்டி இருக்கும்.
  • நாளொன்றுக்கு ஒரு தொட்டி என ஏழு தொட்டிகள் அல்லது அவரவர் தேவை அனுசரித்து எடுத்துக் கொள்ளலாம்.
  • ஏழு தொட்டிகளில் ஒரு உரம் + மண்ணை நிரப்பி அதில முளைத்த கோதுமைகளை தூவி சற்று நீர் தெளித்து நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும்.
  • தினமும் எல்லாத் தொட்டிகளுக்கும் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவும்.
  • எட்டு நாள்கள் கழித்து பார்த்தால் முதல் தொட்டியில் கோதுமைப் புல் 5 அங்குலம் உயரம் வளர்ந்திருக்கும்.
  • புல்லை வேரோடு பிடிங்கி விடாமல் சிறிது விட்டு மீதிப் புல்லை ஒரு கத்திரிக் கோலால் வெட்டி எடுக்கவும்.

கோதுமைப் புல்லை 5 அங்குலத்திற்கு மேல் வளரவிட்டால் அதன் பின் நீளமாக வளரும் புல்லில் அதன் குளோரொஃபில்லின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

கோதுமை புல் சாறு தயாரிப்பு

கோதுமை புல் உடன் சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து
வடிகட்டி எடுத்தால் பசுமையான வீட்கிராஸ் ஜூஸ் கிடைக்கும். காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.முதலில் குறைந்த அளவு குடித்து பார்க்கவும், அலர்ஜி எதுவும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து குடிக்கவும்.

பக்கவிளைவுகள்

தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கு, தொண்டை வீங்குதல் போன்ற விளைவுகள் இருந்தால் கோதுமை புல் சாறு குடிப்பதை தவிர்ப்பது நன்று. மேலும் அவசியம் எனில் பக்கவிளைவுகளுக்கு மருத்துவரை அணுகுங்கள்!

கோதுமை புல் சாறு ஒரு சர்வரோக நிவாரணி. Anti oxidant இருப்பதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. புற்றுநோய் மருத்துவர்கள் புற்றுநோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.


Wheat Grass Juice has the ability to neutralize toxins in the body, prevent tooth decay, decrease high blood pressure, and helps to treat and prevent cancer and AIDS. It also aid in the treatment of breast cancer, Blood Sugar Regulation, Weight Loss. It has Antioxidant and Anticancer property that kills cancer cells. This juice recipe is also known as Godhumai Pul saaru.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.