பூண்டு குழம்பின் மகத்துவத்தை பற்றி பார்க்கலாம்!!!

இயற்கையாகவே பூண்டு(Garlic) பல மருத்துவ குணங்களை கொண்டது. பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. 

தேவையான பொருட்கள் :

 • பூண்டு – 100 கிராம்
 • சின்ன வெங்காயம் – 100 கிராம்
 • தக்காளி – 2 (பெரியது)
 • வெந்தய பொடி – 1/2 டீஸ்பூன்
 • குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
 • கடுகு – 1/2 டீஸ்பூன்
 • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
 • புளி – 1 எலுமிச்சை அளவு
 • கறிவேப்பிலை – சிறிது
 • நல்லெண்ணெய் – 50 கிராம்
 • சமையல் எண்ணெய் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

 • பூண்டை சுத்தமாக கழுவி தோலை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
 • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும். 
 • தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 
 • குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
 • குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விடவும். 

தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்லது.

அப்படி சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பை நீக்கும், Diabetes நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.