ஊட்டச்சத்து நிறைந்த தட்டப்பயறு சாலட் செயல்முறை பார்ப்போம் !!!

தட்டப்பயறில் Calories, Fat, குறைவாகவே காணப்படுகிறது. தட்டை பயறுகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது.

தேவையான பொருட்கள் :

 • வெள்ளரிக்காய் – 1 nos
 • தட்டப்பயறு – 50 gm
 • தக்காளி – 1 nos
 • சிவப்பு குடைமிளகாய் – 1 nos
 • தேங்காய்த் துருவல் – 1 tsp
 • இந்துப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
 • எலுமிச்சை சாறு – தேவையான அளவு
 • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

 • தட்டப்பயறை எடுத்து சுத்தமாக கழுவி நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
 • வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் வேக வைத்த தட்டப்பயறை போட்டு அதனுடன் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
 • அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.

ஆரோக்கியமான தட்டப்பயறு காய்கறி சாலட் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.