எலும்பு மூட்டு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம் !!

எலும்பு மூட்டு வலி பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வழிகள் என்னவென்று சோழ மண்டலதில் இருக்கும் எலும்பியல் ஆராச்சி மையத்தின் தலைவர் Dr.நீலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் Dr. நடராஜன் அளித்துள்ள விளக்கம் என்னவென்று நாம் பார்ப்போம்.

3D illustration of Tibia – Part of Human Skeleton.

ஓவ்வொரு ஆண்டும் August 4-ந் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்தியாவில் எலும்பு மூட்டு தினம் 2012-அம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது .இதை குறித்து விழிப்புணர்வுகள் நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

Bone Limb Deformities என்பது முழங்கால், கணுக்கால், முதுகெலும்பு ஆகிய பகுதிகளில் சிதைவு மட்டுமின்றி, வலியையும் உண்டாக்கும்.

இவற்றை தடுக்க ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் துண்டு ப்ரச்சாரங்கள் (bit notice) மக்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது .அது மற்றுமின்றி மருத்துவமனையில் விளம்பர பதாகைகள் வைத்தும்,பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எலும்பு மூட்டு சிதைவு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நாம் நமது உடல் எடை சராசரியாக இருப்பதை உறுதி படுத்திக்கொள்ளவேண்டும். நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்தாகவும் இருக்கவேண்டும் .மூட்டுகளை அதிகமாகவும், தவறாகவும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் குறைபாடுகளை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது . விளையாட்டு மற்றும் பணிகளின்போது காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் Bone Limb Deformities ஏற்படுவதை தவிர்க்க முடியும் . அது மற்றுமின்றி குறிப்பாக சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவத்தை தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.