உடம்பில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை மறைய செய்வது எப்படி?

பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என்று சொல்லக்கூடிய, தோல் விரிவடைவதால் வரும் கோடுகள் இயல்பானவை. இது பெரும்பாலும் பெண்களுக்கு பிரவேசத்திற்கு பிறகு வரும். அடிவயிற்றில் இந்த ஸ்ட்ரெட்சமார்க்ஸ் கோடுகள் தெரியும். சிகப்பு நிறத்தில், அல்லது வெள்ளை நிறத்தில் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் கோடுகள் இருக்கும். ஆனால், இது பெண்களுக்கு மட்டுமே வராது. ஆண்களுக்கும் வரும்.

ஆணும் பெண்ணும், தாங்கள் பூப்பெய்த வயதை தொட்டவுடன் உடலில் மாற்றங்கள் ஏற்படும். தொழில் ஏற்படும் மாற்றங்களினால்தான் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வருகிறது. பளுதூக்கும் அல்லது உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வரும். பொதுவான, உடனே உடல் எடையை கூட்டினாலோ அல்லது உடனே உடல் எடையை குறைந்தாலோ இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உடலில் வரும்.

நம் உடல் தோல் எலாஸ்டின் மற்றும் கொல்லாஜன் எனும் திசுக்களால் உருவாகியுள்ளது. எலாஸ்டின் திசு, நம் தோல் விரிவடைய மிகவும் உதவுகிறது. ஆனால், தோல் அதன் தன்மையை மீறி விரிவடையும்போதோ அல்லது, மீண்டும் சுருங்கும்போதோ இந்த ஸ்ட்ரெட்சமார்க்ஸ் கோடுகள் தொழில் தெரிய வரும்.

இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் கோடுகள், நாளடைவில் தானாகவே மறைந்து போகும். இருப்பினும் சிலருக்கு இது மறைய அதிக நாள் எடுத்துக்கொள்ளும். மிகவும் வெகு சிலருக்கே இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போகாது. எதுவாக இருந்தாலும், இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை உங்கள் உடலில் இருந்து மறைய செய்ய, இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி வந்தால் வெகு விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் காணாமல் போகும்.

இந்த வீடியோவில் உள்ள மூன்று வீட்டு வைத்தியங்களில் உங்களுக்கு உகந்த ஏதேனும் ஒரு வீட்டு வைத்திய முறையை நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் காணாமல் போகும்.

குழந்தை பிறந்த பிறகு வரும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை வராமல் தடுக்க, பிரசவ காலத்திலேயே நீங்கள் “பெட்ரோலியம் ஜெல்லயை” உங்கள் வயிற்று பகுதியில் தடவி வர வேண்டும். ஆனால், இது சிலசமயங்களில் உங்க பிரசவத்திற்கு ஆபத்தாக போகும் என்பதால், உங்கள் மருத்துவரை அணுகிய பிறகே இந்த பெட்ரோலிய ஜெல்லியால் வயிற்று பகுதியில் தடவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.