நீரிழிவு நோய்க்கான HbA1c பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

சர்க்கரை நோய் பரிசோதனை என்றாலே HbA1c சோதனையை செய்ய சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த பரிசோதனையையும் பரிசீலனை செய்து தான் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மருந்துகளை சிபாரிசு செய்வார். ஆகவே இந்த பரிசோதனையைப் பற்றியும் அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்வோம்!

HbA1c Test என்றால் என்ன

இந்த HbA1c பரிசோதனையானது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கான இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவைக் கண்டறிவது ஆகும். சர்க்கரை நோயை உறுதிப்படுத்தவும், சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரையின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும் இந்த பரிசோதனை முடிவுகள் உதவுகிறது.

க்ளுக்கோஸ் என்றால் என்ன

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தான் க்ளுக்கோஸ் என்கிறோம். நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மூலக்கூறுகள் மெட்டபாலிசம் மூலம் க்ளுக்கோஸ் ஆக எளிதாக்கப் படுகிறது. இந்த மூலக்கூறுகள் எளிதாக இரத்தத்தில் கலந்து உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் உணவாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த க்ளுக்கோஸ் மூலக்கூறுகள் இரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்கள் (hemoglobin ) உடன் இணைந்து இருக்கும். இரத்த சிவப்பணுக்களின் ஆயுள் காலம் மூன்று மாதங்கள் என்பதால் மூன்று மாதங்களின் சராசரி இரத்த சர்க்கரை அளவை கண்டறிய முடியும்.

  • இயல்புநிலை ஹீமோகுளோபின்  A1c 4% and 5.6%. (இயல்பு நிலை)
  • சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை Hemoglobin A1c  5.7% and 6.4%  
  • சர்க்கரை நோய் 6.5% 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உணவு, உடற்பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தும் போது HbA1c அளவைக் குறைக்கலாம். வருடம் இரண்டு முறை இந்த பரிசோதனையை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சர்க்கரை நோய் மேலாண்மையில் முதற்கட்ட முயற்சியே HbA1c அளவைக் குறைப்பது தான். இந்த அளவீடானது தனிநபரின் வயது, உழைப்பு, உடல்வாகு சார்ந்தது. ஆகவே பொதுப்படையான அளவீடுகளால் சர்க்கரையின் அளவை குறைக்க இயலாது.


In HbA1c, it is important to note that because blood glucose levels fluctuate constantly, literally on a minute by minute basis, regular blood glucose testing is required to understand how your levels are changing through the day and learning how different meals affect your glucose levels.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.