க்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்!

கொத்தமல்லி தழையில் ஏ, பி, சி என விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் ஆரோக்கியத்திற்க்கு தேவையான  அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. கொத்தமல்லி சாறு செய்வதற்கு என்ன தேவையென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • கொத்துமல்லி தழை – 1/2 கட்டு
 • தேங்காய்  –  1/4 மூடி துருவல்
 • கருப்பட்டி (அல்லது ) சுத்தமான தேன்  – ருசிக்கேற்ப

செய்முறை

 • கொத்தமல்லி தழையை வேர்களை நீக்கி, நன்கு அலசி கழுவவும்.
 • தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
 • பிறகு அதனுடன் கொத்தமல்லி தழை யையும் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
 • பிறகு இவற்றை வடிகட்டவும்.
 • வடிகட்டிய பின் கிடைக்கும் சாறுடன் சுவைக்கேற்ப தேன் அல்லது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
 • சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.

கொத்தமல்லி சாறின் பயன்கள்

 • கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை நீக்கும் குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் சரும நோய்கள் போன்றவற்றை சரி செய்கிறது.
 • கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும்.
 • இரத்த சோகை இருப்பவர்கள் இதனை தினசரி குடித்தால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
 • இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
 • செரிமானத்தை தூண்டுகிறது மேலும் குடல் மற்றும் இரைப்பையின் இயக்கங்களை சீராக்குகிறது.
 • கொத்தமல்லியில் அதிக அளவிலான கால்சியத்தை உள்ளதால், எலும்பு வலுப்பெறும்.

Coriander has a powerful antioxidant and detoxifying action, its intake helps clear the blood and liver from all harmful substances and stops the development of inflammatory processes. For liver detoxification and as a strong antioxidant, drink juice from its leaves on an empty stomach. Applying coriander juice to your scalp helps in boosting your hair growth and also fights hair loss. It is a natural and essential nutrient enabling good hair growth. To make your hair strong and long, apply coriander juice on your scalp and leave it for an hour before washing it off with shampoo. Coriander is extremely rich in folate, antioxidants, vitamin C and beta-carotene. Your skin feel soft, supple and glowing when your cells are protected from oxidative stress. Be it acne or pigmentation, oily or dry skin, pimples or blackheads, coriander juice works like magic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.