மாங்கோ ரஸாயானா

இது மாம்பழக்காலம். குண்டு குண்டாக மஞ்சள் நிறத்தில் அடுக்கிய மாம்பழங்களின் வாசனை, அதனை கடந்து செல்பவர்களை சுண்டி இழுக்கும். எந்தவித கலரோ, வாசனையூட்டியோ இல்லாத நல்லதோர் ரெசிபி.

முழுக்க முழுக்க இயற்கை உணவு. ரத்னகிரி அல்போன்சா மாம்பழங்கள் தாராளமாக கிடைக்கும் என்பதால் தான் இந்த ரெசிபி மராத்தி மொழி பேசும் மஹாராஸ்டிராவின் சிறப்பு மிக்க பானம்.

மாம்பழம் குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் கிடைக்கும் கனி என்பதால், மாம்பழ சீசனில் ஆசைதீர உண்டு மகிழ்வோம்.

ராஜகனிகளில் ஒன்றான மாம்பழம் ஜீரோ கொழுப்பும், கொலஸ்டிராலும் இல்லாத கனி. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது. “பெக்டின்”, என்ற நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும். விட்டமின் ஏ, பி6 இருப்பதால் சருமத்திற்கு மற்றும் கண்பார்வைக்கு நல்லது.

நல்ல மஞ்சள் நிற பழம் சந்தேகமே வேண்டாம் கேரட்டை போன்று இதிலும் பீட்டா கரோட்டின் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மாம்பழத்தை எடை குறைக்க வேண்டும் என்பவர்கள் இதனை எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள் ஏனெனில் 100கிராம் மாம்பழத்துண்டுகள் வெறும் 60 கலோரி அளவு மட்டுமே தரும். மாம்பழ சாறாக எடுக்க கூடாது ஏனெனில் ஜீஸ் என்று வரும் போது இனிப்புக்காக சர்க்கரை சேர்த்துக் கொள்வதால் கலோரி மதிப்பு அதிகமாகும்.

முரண்பாடாக நாம் இனிப்பு சேர்த்த ஆனால் ஹெல்தியான பாரம்பரிய ரெசிபியை காண்போம். நாவிற்க்கு அவ்வப்போது ருசியும் வேண்டும். துறவு வாழ்க்கை இல்லைதானே?

“மாம்பழ ரசாயானா”, பெயரே கவர்ச்சியாக உள்ளது. கார்னெட் கல் வைத்து பழுக்காத பழமாக வாங்கி கொள்ளவும்.

தேவையான பொருட்கள் :
பழுத்த மாம்பழங்கள் – 2
திக்கான தேங்காய் பால் – 3/4 கப்
வெல்லம்
பட்டைப்பொடி

Preparation time – 10 minutes
Category – juice /traditional

செய்முறை :
* தோல், கொட்டை நீக்கி மாம்பழத்துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.

* இதனுடன் வெல்லம் , தேங்காய் பால் , பட்டைப்பொடி சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்.

* அழகிய கோப்பைகளில் பரிமாறவும்.


Summer season is the mango season. It is yellow in color and sweet-smelling. Alphonso, neelam, sindoora are few varieties of mango. It has 0% fat, cholesterol. Mango Rasayana is a special Maharashtrian recipe. It has rich fibre content and antioxidant property. As it contains “Pectin”, it is used to treat Constipation. Follow the simple steps for Yummy Mango Rasayana.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.