சுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக?

இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு.சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு பயன்படுத்தப்படுகிறது. சுக்குனை வாரம் ஒருமுறை யாவது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

சுக்குப்பால் அருந்தவும்

வாரம் ஒருநாள் சுக்குப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து, பால் குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் செரிமானத்தை தூண்டும். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் தடுக்கும். 

வயிற்றுப் பூச்சிகள் அழிய

சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். 

மூட்டு வலி

நடுத்தர வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

கபம் கரைய

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை நீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி, மார்ச்சில் மற்றும் கபம் விலகும்.

விஷ ஜந்துக்கள் கடித்தால் என்ன செய்வது

தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கும்.

தீராத தலைவலிக்கு

தலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். 

அஜீரணப் பிரச்சனை

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.

இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும் ஆகவே சுக்கு ஒரு சர்வரோக நிவாரணி.


Dry ginger facilitates weight loss by improving digestion, which helps in burning stored fat and processing glucose in the blood. It also speeds up metabolism and controls fat absorption, thanks to its thermogenic properties. Another benefit of dry ginger is its ability to curb hunger and overeating. Lowers cholesterol. It has been used to help digestion, reduce nausea and help fight the flu and common cold, to name a few. Ginger can be used fresh, dried, powdered, or as an oil or juice, and is sometimes added to processed foods and cosmetics. Ginger can be a great natural solution to help you feel better when dealing with indigestion or nausea. Mix some ginger powder in some water still or carbonated, or apple juice and drink it. This simple drink will help keep your stomach settled and feeling at its best.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.