நினனவை அதிகரிக்க உதவும் தியானப் பயிற்சி

தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்தால் நினைவுத்திறனும், மனநிலையும் அதிகரிக்கும். தேர்வு சமயத்தில் நியாபகம் சக்தியை அதிகரிக்க உதவும் தியானம், தினமும் செய்தல் நல்ல பலன் கடைக்கும்.

நிறைய பேருக்கு நினைவுத்திறன் குறைபாடு இருக்கிறது. இயற்கையாகவே நினைவுத்திறனை அதிகரிப்பதற்கு சில ஆயுர்வேத நடைமுறைகள் இருக்கின்றன.

மூளைக்கு எளிமையான பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க செய்யலாம். வழக்கமாக வலது கைதான் அதிகமாக வேலை செய்து கொண்டிருக்கும். அதற்கு மாற்றாக இடது கையை பயன்படுத்தலாம். அதன் மூலம் மூளையின் ஆற்றல் மேம்படும்.

ரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க வேண்டும். மூளைக்கு போதுமான அளவு ரத்தம் சென்றால் நினைவாற்றல் அதிகரிக்கும். சில யோகாசனங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவும். உடற்பயிற்சியும் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும்.

கட்டுப்பாடற்ற உணவு பழக்கம் மூளை மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதனால் சரியான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிராக்கோலி, மீன்கள், பூசணி விதைகள், அக்ரூட் பருப்புகள், மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில்   ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, டி.என்.ஏ  பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும், ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.