நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதில் இருக்கும் தீங்குகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா ??

நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முதல் படியே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்ப்பது தான். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வயிறு நிறைய உணவை உட்கொள்ளக்கூடாது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், ஆயுர்வேதம் ,உங்கள் நல்வாழ்வுக்கான சில உணவுப்பழக்கங்களை பரிந்துரைக்கிறது. இந்த பழக்கங்களை நாம் ஆரம்ப காலத்தில் பின்பற்றி வந்தோம் . ஆனால் இன்றைய உலகின் நவீனமயத்தின் காரணமாக இந்த பழக்கங்களை நாம் பின்பற்றுவதை மறந்துவிட்டோம் .நம் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருந்ததற்கு இதுவே முக்கியமான காரணம் ஆகும்.

Not to drink water while standing

இப்போது அது என்ன பழக்கங்கள் என்பதைக் காண்போம் :

  • நின்று கொண்டே எதை சாப்பிட்டாலும், அது வயிறு மற்றும் செரிமானத்திற்கு நல்லதல்ல, அது நேரடியாக உட்புற செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிக்கும்.
  • இதனால் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும். இப்பழக்கம் இப்படியே தொடர்ந்தால், அது Arthritis என்னும் கீல்வாதத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • ஒருவர் தினமும் நீரை நன்கு சுடவைத்து குடிக்க ஆரம்பித்தால், உடலின் Metabolism சிறப்பாக இருப்பதுடன், அஜீரண கோளாறுகளும் தடுக்கப்படும்.
  • உணவை செரிமானம் செய்வதில் தோரணை உடல் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறந்த உடல் தோரணை என்றால் அது தரையில் அமர்வது தான். உணவை தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால், Digestion பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, வாய்வு பிரச்சனைகளும் வராது.
  • ஒவ்வொரு பருவநிலையின் போது கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் அதிகமாக சாப்பிடவேண்டும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கேட்டால், நிச்சயம் அது குறைவாகத் தான் இருக்கும். இது ஒரு தவறான பழக்கம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

not to eat more than than your limits
  • நாம் எப்போதுமே உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமாக உணவை உட்கொள்ளக்கூடாது.
  • அதேப் போல் எப்போதெல்லாம் பசியை உணர்கிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் நீரை குடியுங்கள்.இதனால் அதிகப்படியான பசி கட்டுப்படுத்தப்படும்.
  • நாம் எவ்வளவு கடுமையான பசியில் இருந்தாலும், அரை வயிறு உணவையே உட்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் மிதமான காரமுள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும்
  • நாம் சாப்பிடும் போது கவனம் முழுவதும் சாப்பாட்டில் மட்டும் தான் இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் ஏன் அப்படி கூறினார்கள் என்றால் சாப்பிடும் போது கண்களால் பார்ப்பதில் மூலம் மூளை அந்த சாப்பாட்டிற்கு தேவையான ஹோர்மோனேகளை வைட்டிற்குள் சுரக்கச்செய்யும் ,சிலர் சாப்பிடும்பொழுது டிவியைப் பார்த்துக் கொண்டும் அல்லது மொபைலை பயன்படுத்திக்கொண்டும், அல்லது ஏதேனும் புத்தகத்தைப் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இது ஒரு கெட்ட பழக்கம். நாம் எவ்ளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் பசி தீர்ந்த பின்பும் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம், இது மிகவும் ஆபத்தான பழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.