எட்டு நடைப்பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்வு!

தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்து கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். சித்தர்கள் அருளிய இந்த நடைப்பயிற்சியை பற்றி அறிவோம்!

பயிற்சியும் படமும் 

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

“இஞ்ச் “அளவுகளை கண்டு அஞ்ச வேண்டாம்.மனதிற்க்குள் குத்துமதிப்பாக எட்டு வடிவத்தை எண்ணிக்கொண்டு , மேற்குறிப்பிட்ட திசைகளில் நடக்கவும்.நாளடைவில் பழகிவிடும்.மனக்கணக்கை விஞ்சி ஒரு அளவுண்டா?

நடக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

1. நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

2. தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது நன்று.

3. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 .00 மணி

4. வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம்.

5. நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

6. நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

7. மனதிற்குள் மந்திரம்/ ஸ்லோகம் சொல்லிக் கொண்டே நடக்கலாம்.

8. இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். திசைகளில் மாற்றம் வேண்டாம்.

9. 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு       மூச்சுக்காற்றையும் அதாவது மூக்கில் காற்று உட்சென்று வெளியேறுவதை உணரலாம்.

10. இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது      கரைந்து இறங்குவதை உணரலாம்.

எட்டு நடைப்பயிற்சி பலன்கள்

எந்தவொரு பழக்கமுமே இடைவிடாது செய்யும் போது தான் அதன் முழு பலன்களை உணரமுடியும்.

1. இந்த பயிற்சியை காலை ,மாலை தினசரி ஒரு மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள்      ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

2. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும் என்று நம்பப்படுகிறது.

3. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.

4. முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் ஐந்து கிலோ பிராண வாயு உள்ளே சென்று         மார்புச்சளி நீக்கப்படுகிறது.

5. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும். சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

6. நுரையீரல் தொடர்புடைய ஆஸ்துமா நோய்கள் கட்டுக்குள் வருகிறது.

7. கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது.

8. காது கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

9. மிதமான வேகத்தில், அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

10. இருவேளையும் முப்பது நிமிடம் நடப்பதால், பாத வெடிப்பு,, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

11. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கரவண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் ஆரோக்கியமாக வாழ வகைச்செய்கிறது.

பரபரப்பான வாழ்க்கை நமக்கு தந்த நோய்களில் இருந்து விடுபட ஒரு சிறு எட்டு எடுத்து வைப்போம்.


This article explains the right walking procedure weight loss in Tamil language. Walking is one of the best exercise to lose weight, fats and to keep body healthy. Instead of regular walking, figure 8 walking for weight loss is suggested by many dietitians and doctors to achieve faster results and to get many more health benefits. Number 8 walk benefits us in many ways. It is a very effective exercise for weight loss and it helps to lose weight and fats faster than normal walking.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.