நீர்க்கடுப்பை விரட்டும் வெங்காயம்

உணவே மருந்து பட்டியலில் வெங்காயத்திற்க்கு இடம் உண்டு. வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. ஏழை முதல் கோடிஸ்வரன் வரை உண்ணும் உணவில் வெங்காயத்திற்க்கு இடம் உண்டு.

வெங்காயத்தின் பயன் தெரிந்து தான் நம் முன்னோர்கள் காலை உணவில் நீராகாரத்துடன் வெங்காயத்தை உண்ணும் பழக்கம் வைத்திருந்தார்கள். தயிர்பச்சடி, சாலட் என்று பச்சை வெங்காயம் நம் உணவில் அடிக்கடி இடம்பெறுகிறது.

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களில் முக்கியமானது நீர்க்கடுப்பு. உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும், வியர்வை மூலம் உடலில் இருந்து நீர் வெளியேறுகிறது. உடலின் கழிவுகள் சிறுநீர் மூலம் சரியாக வெளியேறாமல், தாது உப்புக்கள் தேங்கி சிறுநீர் அடர்த்தி ஆகிறது. ஆகவே சிறுநீர் மஞ்சளாக, நாற்றத்துடன் வெளியாகிறது. சிறுநீர்க்கழிக்கும் போது எரிச்சலும், நாளடைவில் சிறுநீரக தொற்று, அழற்சி அதன் விளைவாக இடுப்பு வலி மற்றும் வயிற்றில் வலி என அவதியுறுகின்றனர்.

நீர்க்கடுப்பால் யார் அதிகம் அவதியுறுகிறார்கள்?
வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போக்குவரத்து காவலர்கள், மார்க்கெட்டிங் தொழில் நண்பர்கள், விளையாட்டு வீரர்கள், சாலையோர வியாபாரிகள், அடுப்பில் வெந்து வரும் சமையல் கலைஞர்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள்…

நீர்க்கடுப்புக்கு தீர்வு

  • நீர்க்கடுப்புக்கு எளிய தீர்வு தாராளமாக, குறிப்பாக நான்கு லிட்டர் தண்ணீர் தினசரி அருந்த வேண்டும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனடியாக நின்றுவிடும்.
  • பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
  • வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வேனல் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

“Neerkaduppu” is common where both Men and women experience pain, discomfort and burning sensation while urinating. Onion contains several nutrients such as Vitamin C, folic acid, calcium, iron,protein,etc. Onions help treat urinary tract infection because of their antimicrobial activity, which means they could help to kill bacteria and other microorganisms and prevent them from growing in the body. No Indian food is prepared without onion nowadays. Intake of raw onion or onion juice in helps reducing body heat which is a major cause of painful urination.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.