பாதச்சுருக்கம் நீங்க அரிசுமாவு இருந்தால் போதும்!!!

வயசாகி முகத்துல சுருக்கம் வருதோ இல்லையோ நம்பள பல பேருக்கு பாதங்கள சுருக்கம் வந்து வயசான கால்கள் மாதிரி இருக்கும்.

நம்ப பாதத்துல சுருக்கம் வராம பராமரிக்குறது நம்ப கவனிக்க வேண்டிய விஷயம் . பாதத்தை சரியா நம்ப பராமரிக்களான நமக்கு குதிகால் வீக்கம் , பங்கஸ் தொற்று,கால் வீக்கம் எல்லாம் வரும். இதெல்லாம் கூட பரவாளங்க நம்ப பாதம் சுருக்கமாயிருந்த நமக்கு ரொம்ப வயசான மாதிரி தொற்றத்தை குடுக்கும்.

ஆண்களை காட்டிலும் பெண்களின் பாதங்களை உற்றுநோக்கினால் சுருக்கங்களை பார்க்க முடியும். பாதங்களில் உண்டாகும் சுருக்கங்களை வீட்டிலேயே எப்படி சேரி செய்யலாம்னு பாப்போம். இதை எப்படி பாதங்களில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 3 தேக்கரண்டி

ஆப்பிள் சீடர் வினிகர் – அரை டீஸ்பூன் அளவு

தயிர் -5 Tsp

தேன் – 2 Tsp

அரிசி மாவுடன் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக குழைக்கவும். இந்த கலவை நல்லா தலதலன்னு இருக்கனும், தயிர் பற்றாக்குறை இருந்தாலும் மீண்டும் தேவையான அளவு சேர்க்கலாம். பாதங்களை மிதமான வெந்நீரில் வைத்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும் .

பிறகு இந்த கலவையை பாதங்களில் தடவி மெதுவாக தேய்த்து தேய்த்து மசாஜ் செய்தபடி தடவவும். கணுக்காலின் கீழிருந்து பாதங்களின் மேல் பகுதி கீழ்பகுதி என அனைத்து இடங்களிலும் இதை தடவி விட வேண்டும். பிறகு பாதத்தை கீழே இறக்காமல் வைத்திருந்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து moisturizer தடவவும்.

ஆண்கள், பெண்கள் அனைவரும் இதை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.