இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறிய பேப்பர் மானிட்டர் !

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு என்பது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது அதற்கு மேல் கூட சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இளம் வயதில் வரும் சர்க்கரை நோய் என்றால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆகவே தினசரி சர்க்கரையின் அளவை கண்காணிப்பது பலருக்கும் பெரும் பிரச்சினை. இதற்கெல்லாம் தீர்வாக துபாய் பல்கலைக் கழகம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டறிந்துள்ளது.

காகித மானிட்டர்

  • King Abdullah University of Science and Technology (KAUST) in Saudi Arabia இங்க்ஜெட் டெக்னாலஜி (inkjet technology) மூலம் காகிதம் (paper monitor) பயன்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டறியும் தொழிற்நுட்பம் கண்டறிந்து உள்ளனர்.
  • pH பேப்பர் கொண்டு ஒரு திரவத்தை அமிலமா? காரத்தன்மையா? எனக் கண்டறிவதை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய கண்டுபிடிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
  • ஒரு முறை பயன்படுத்தும் காகிதம் கொண்டு ( disposable paper ) வாயில் வரும் உமிழ்நீரைக் கொண்டு சர்க்கரை அளவை கண்டறியப்படுகிறது.
  • விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு அதில் ஒரு சென்சார் தயார் செய்து அதில் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு தயார் செய்து அதனை ஒரு பளபளப்பான காகிதத்தில் ஒட்டி வைக்கிறார்கள். அதிலுள்ள நுண்ணிய எலக்ட்ரோடுகள் நுனியில் க்ளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் உள்ளது. இந்த என்சைம் ஆனது உமிழ்நீர் அல்லது வியர்வையில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறிந்து சமிக்ஞைகள் அளிக்கிறது. இந்த சமிக்ஞைகள் பாலிமர்களால் ஆன இங்க் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை  பேப்பர் மானிட்டரில் நிறங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் நீடித்த ஆராய்ச்சிகளுடன் பொது உபயோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Scientists have developed disposable paper-based sensors that can measure glucose concentrations in saliva, paving the way for a pain-free alternative to diabetics for monitoring their blood sugar levels daily.  Smartphone users may soon be able to check their blood glucose level without having to take a blood sample, using a new app for iOS and Android. Checking your blood sugar level usually needs at least a drop of blood for testing. U.S. regulators have approved the first continuous blood sugar monitor for diabetics that doesn’t need backup finger prick tests.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.