முக்கனிகளில் ஒன்றான பலாவும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது ஆச்சரியமாக உள்ளதா?

பலாப்பழத்தின் மணமும் அதன் பிரத்யேக சுவையும் எவருக்கும் சாப்பிட பிடிக்கும்.பொதுவான ஒரு கருத்து உண்டு, பலாப்பழம் மிகுதியாக உண்டால் அஜீரணம் ஏற்படும் என்பது தான். ஆனால் என்னவொரு ஆச்சரியம் என்றால் பலாவின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப்பலன் அளிக்கிறது. அதனைப் பற்றி பார்ப்போம்.

வயிற்றுப் புண்  ஆற 

பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன்அளவு எடுத்து தேனில் கலந்து காலை வேளையில் மட்டும் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும். போனஸாக வாயுத் தொல்லைகள் நீங்கும்.

பல்வலி  குணமாக

பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பல்வலி குறையும். மேலும் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும்.

அதிக தாகம் நீங்க

பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கறிக்குழம்பு போல சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும், உடலுக்கு வலு கொடுக்கும். பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

புற்றுநோய் வராமல் தடுக்க

பலாப் பலத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ப்ளேவோனாய்டுகள்  புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தடுக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, மலக்குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

தோல் சுருக்கம் நீங்க

பலாப்பழக்கொட்டையை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், சில வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

பட்டுபோன்ற சருமம் பெற

 பலாப்பழத்தின் விதையை பொடியாக நறுக்கி உலர வைக்கவும். அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, கால் மணி நேரம் கழித்து  கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறுவது உறுதி.


Although the results from these studies are promising, more studies of people eating fresh jackfruit are necessary to confirm these potential benefits. Summary Jackfruit has a low glycemic index and provides some fiber, protein and antioxidants, all of which may promote better blood sugar control. Let us take a look at some of jackfruit’s benefits. If you are looking at losing weight, add more jackfruit to your diet as it has lots of dietary fiber that helps boost digestion. In fact, jackfruit is a low-calorie fruit that will help you with your weight loss struggles. Jackfruit being rich in copper which helps in thyroid metabolism especially in hormone production and absorption ensures a healthy and fit thyroid. It also helps people suffering from thyroid disorders. The jackfruit root is a remedy for skin diseases.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.