இருமும் போது எச்சிலில் இரத்தம் வருகிறதா?

இரத்தம் என்றாலே நம்மை பதட்டமடைய செய்யும், வாந்தி, எச்சில், சிறுநீர், மலம், மார்பகத்தில் இருந்து இரத்தம் வெளியேறுவது நம்மை எச்சரிக்கை செய்ய உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகள் தான். எச்சிலில் இரத்தம் வந்தால் ஆரோக்கியமான இளம் வயதூனர் என்றால் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் வயதில் பெரியவர்கள் இதயக்கோளாறுகள், அல்சர், நுரையீரல் கோளாறுகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இருமலுடன் வரும் சளியில் இரத்தம் வெளியேறுவதை மருத்துவ மொழியில் haemoptysis என்று அழைக்கின்றனர். இரத்தத்தின் நிறம் மற்றும் அளவு, எத்தனை முறை வருகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

எச்சிலில் இரத்தம் வருவதற்கான காரணங்கள்

 • நாட்பட்ட இருமல் அதனால் வரும் இரத்தம்.
 • நுரையீரல் தொற்று இருந்தாலும் சளியுடன் இரத்தம் வரலாம். சீழ் கலந்து வருதல், மேலும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.
 • வாந்தியுடன் வந்த இரத்தம் என்றால் உணவுப்பருக்கைகள் ஒட்டி இருந்தாலே உணவு மண்டலத்தில் கோளாறுகள் என்று தெரிந்து கொள்ளலாம்.
 • மூக்கில் இருந்து ரத்தம் வந்தாலே, அதன் விட்ட குறையாக எச்சிலுடன் இரத்தம் வெளியேறும்.
 • Pulmonary empolisom போன்ற நுரையீரலில் இரத்தம் உறைந்து கட்டிகள் இருந்தால் கூட எச்சிலுடன் இரத்தம் வெளியேறும். மூச்சு திணறலும் நெஞ்சு வலியும் இருக்கும்.
 • Pulmonary oedema என்ற நுரையீரல் வீக்கம், நீர் கோர்த்தல் பிரச்சினையில் நுரையுடன் கூடிய எச்சிலில் இரத்தம் வெளியேறும்.
 • தீவிர புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் இருந்தால் கூட எச்சிலுடன் இரத்தம் வெளியேறும்.
 • காசநோயால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் கூட எச்சிலுடன் இரத்தம் வெளியேறும்.
 • உணவுக்குழாய், இரைப்பையில் புற்றுநோய் இருந்தால் கூட இரத்தம் வெளியேறும்.
 • இதயக் கோளாறுகள் போன்ற சில வியாதிகளுக்கு இரத்தம் உறையாமலும், இரத்த கட்டிகள் கரைவதற்க்கும் மருந்துகள் எடுத்து வந்தாலும் எச்சிலுடன் இரத்தம் வெளியேறும்.
 • எச்சிலில் இரத்தம் என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். மார்பு எக்ஸ்ரே, இரத்த பரிசோதனைகள் மற்றும் சி.டி. ஸ்கேன் எடுத்து உண்மையான காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

The most common causes of coughing up blood are irritation in the airways from coughing or an infection. Some possible causes of blood-streaked sputum includes Blood clots in the lungs (pulmonary embolus).With pulmonary emboli, people often have pain, redness, or swelling in their calves due to deep vein thrombosis. One of the common symptoms of lung cancer is coughing up blood. The medical term for this is hemoptysis, the presence of blood in the sputum (spit or phlegm)coughed up from the lungs. Blood in the sputum is a common event in many mild respiratory conditions, including upper respiratory infections, bronchitis, and asthma. It can be alarming to cough up a significant amount of blood in sputum or to see blood in mucus frequently. In severe cases, this can result from a lung or stomach condition.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.