அரிப்பு எனும் ஒவ்வாமை ஏற்படக் காரணம் என்ன?

சுகம் எதில் இருக்கு என்றால் சொரிவதில் எனும் புகழ்வாய்ந்த கேலிப் பேச்சு உண்டு. சிரங்கு, சோரியாஸிஸ் போன்ற தோல் வியாதிகள் வந்தவர்கள் படும்பாடு உணர்த்தும் அரிப்பு மட்டும் அல்ல ஆரோக்கியத்தை கெடுக்கும் எதுவும் நேராதது தான் சுகம் என்பது தான் உண்மை.

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் பல இருந்தாலும் இவற்றை இரண்டு முக்கிய பிரிவுகளில் வகைப்படுத்தலாம். 

 • உடலின் வெளியிலிருந்து வரும் காரணிகள் தரும் ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு.
 • உடலுக்குள்ளேயே ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் ஒவ்வாமை அதனால் ஏற்படும் அரிப்பு. 

புறக்காரணிகளால் ஏற்படும் அரிப்பு பற்றி பார்ப்போம்

 • வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். 
 • சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.
 • குழந்தைகளுக்கு டயாபர் ஒவ்வாமை ஏற்பட்டால் பிட்டத்தில் அரிக்கும்.
 • செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். 
 • பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும்.  
 • துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு  பெண்களுக்கு  ஏற்படும் ஒவ்வாமையால் அரிப்பு தோல் உரிதல் ஏற்படும்.
 • அதிக வெயில், குளிர் கூட சிலருக்கு அரிப்பு தரும். எ.கா: வியர்க்குரு, பனி வெடிப்பு.
 • செல்லப் பிராணிகளின் உரோமம், அதன் மீது வளரும் ஒட்டுண்ணிகள் தரும் ஒவ்வாமையால் அரிப்பு ஏற்படும்.
 • தொடை இடுக்கு அரிப்பு, கால் விரல்களுக்கு இடையில் ஏற்படும் அரிப்பு, உடல் எடை அதிகரிக்கும் போது தோல் மடிப்பு நோய் ஏற்படும் அதனால் கூட அரிப்பு ஏற்படும்.
 • வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறையும் போது தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படும். 

Many skin conditions that are common can cause itchy skin. The following can affect any area of skin on the body. Psoriasis is an autoimmune disease that causes skin redness and irritation, usually in the form of plaques. Dermatographis is a raised, red, itchy rash caused by pressure on the skin. Use creams, lotions or gels that soothe and cool the skin. Short-term use of nonprescription corticosteroid cream may temporarily relieve an itch accompanied by red, inflamed skin. Or try calamine lotion or creams with menthol or capsaicin, or a topical anesthetic, such as pramoxine. Avoid scratching whenever possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.