ஹேர் டை உபயோகிக்கும் ஹீரோக்களே! கவனம்!

கருங்கூந்தலுக்கு ஆசைப் படாத ஆண்களோ, பெண்களோ கிடையாது. தவறான உணவு முறைகளாலும், சுற்றுசூழல் சீர்கேட்டாலும், ஷாம்பு உட்பட்ட அழகுசாதனங்களின் வேதிப் பொருட்கள் விளைவால் மெலனின் பற்றாக்குறையால், பரம்பரை மற்றும் குடி புகை பழக்கம் என்று பல்வேறு காரணங்களினால் இளநரையோ முற்றும் நரையோ ஏற்படுகிறது. எதற்கும் தீர்வு வைத்துள்ள நவீன அறிவியியல் தந்த தீர்வு தான் ஹேர் டை!

ஹேர் டை இல் உள்ள வேதிப் பொருட்கள்:

1.Hydrogen peroxide: ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாக செயல் படுகிறது. முடியில் உள்ள சல்பரை நீக்கி, முடியை லேசாக்கி எடைக்குறைக்கிறது.

2. Ammonia – அம்மோனியா ஒரு வினையூக்கியாக செயல் பட்டு, ஒவ்வொரு முடியின் புற தோல் களை ஊடுருவி முடியின் வேர்களை சென்றடைய உதவுகிறது .

3. ஒவ்வொரு கம்பெனி டை களும், வித விதமான வேதிப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றுள் சில, p-phenylenediamine, ethanolamine, sodium carbonate, 4-aminobiphenyl, etc.

ஹேர் டையில் உள்ள அம்மோனியா முடியை லேசாக்கி அதில் கேபில்லரிகளை உண்டாக்குகிறது. இந்த கேப்பிலரிகளின் வழியாக டையில் உள்ள நுண் நிறமிகள் முடியில் தங்குகிறது.

நிறமியில் உள்ள நிறத்தில் கூந்தலின் நிறம் மாறுகிறது. இதே செயல்கள் திரும்ப திரும்ப நடக்கும் போது முடி வலுவிழந்து உதிர ஆரம்பிக்கிறது.

ஹேர் டை யின் பக்க விளைவுகள்:

1. மயிர்க்கால்களை வலுவிழக்க செய்கிறது, தோல் அரிப்பு, முடி வெடித்தல், தோல் மற்றும் முடியின் நிறம் மாறுதல்.

2. Lead acetate – நாளடைவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்

3. 4-Aminobiphenyl – பெரும்பான்மையான முன்னணி நிறுவன தயாரிப்புகளில் உள்ள கார்சினோஜன் (Substance that causes or aggravates tumors or other types of cancer)

4. கண் எரிச்சல், பார்வைத் திறன் குறைதல், மூளைப் பாதிப்பு கடும் பின் விளைவுகளை தரும் ஹேர் டைக்களை தவிர்த்து மாற்று முறைகளான சித்தா, ஆயுர் வேத, ஹோமியோபதி முறைகளை அடிப்படையாக கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்குவோம்.

நம் முன்னோர்கள் பயன் படுத்திய நெல்லிக்காய், மருதாணி, கறிவேப்பிலை, நிலாவரை, கரிசலாங்கண்ணி, வேம்பாளம், தேங்காய் முதலியவை கூந்தலுக்கு வலுவும் நிறமும் கொடுப்பவை.

ஹோமியோபதி: ஆர்னிகா, ஜபோரண்டி (jaborandi) கலந்த குறைந்த அளவு பக்க விளைவுகள கொண்ட தயாரிப்புகள் கிடைக்கிறது.

ஆயுர் வேதா – எல்லா ஆயுர் வேத கடைகளிலும், ஹென்னா, திரிபலா சூரணம், பிரிங்கிராஜ் கலந்த கூந்தல் கருப்பு பூச்சுக்கள் கிடைக்கின்றது.

சித்த மருத்துவம் – Banjaras, Arvind Siddha பிராண்டுகளில் ஹேர் டை க்கள் கிடைக்கின்றது. அழகுக்கு உயிரை கொடுக்க துடிக்கும் அழகுப் புயல்கள் நிறைந்த காலம். ஆரோக்கி்யத்துடன் கூடிய அழகே அழகு! நம்மால் இயன்ற இடங்களில் இயற்கை மருத்துவத்தை நாடுவோம்!


Side effects of hair dyeing or hair coloring: Using hair colors can cause allergic reaction or other health discomforts like, skin irritation, discoloration of skin, dry and brittle hair, asthma, rashes, multiple myeloma, PPD induced cancer, conjunctivitis, ulceration ets. It is safe to use natural coloring using natural ingredients.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.