“ஸ்போர்ட்ஸ் பிரா”உபயோகித்தால் இந்த தொல்லை இல்லை!!!

உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு அணிவது மிகவும் அவசியாமானது. மார்பகங்களின் வடிவை அழகாக வைத்திருக்க உதவும்.

தினசரி உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் பெண்கள் உள்ளாடையை கண்டிப்பாக அணிய வேண்டும்,பொருத்தமற்ற அல்லது இறுக்கமான உள்ளாடையை அணிந்தால் இடையூறக இருக்கும்.இது மார்பகத்தின் வடிவை மாற்றுவதோடு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.உடற்பயிச்சிக் செய்யும் நேரத்தில் அணிவதற்கென்றே சில பிரா உள்ளது ,அதை பயன் படுத்துவது பெண்களுக்கு மிகவும் நல்லது.

கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது மார்பக தசைகள் விரிவடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில் பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகத்தில் வலியை அதிகப்படுத்தும்.

ZUMBA, JOKING, WALKING ,EXERCISE போன்ற உடல் இயக்க செயல்பாடுகளின் போது மார்பகங்களின் இயக்கம் அதிகரிக்கும்.அப்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது மார்பகங்களின் இயக்கத்தை சீராக்கும்.

உடற்பயிற்சியின்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளிப்படும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவும். காற்றோட்டத்திற்கு ஏற்ப சருமத்தை குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும் வைத்திருக்க உதவும்.

ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கும்போது சரியான மார்பக அளவுடன் வாங்க வேண்டும்,பிராவின் கப்(CUP SIZE) அளவு,பிராவின் பட்டை மற்றும் இலகுத்தன்மை(ELASTIC) பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம். வழக்கமான பிராக்களில் இருக்கும் எலாஸ்டிக், ஹூக்குகள் ரத்த ஓட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்திற்கும் உதவும். எந்த அசவுகரியமும் இல்லாமல் நீண்ட நேரம் அணியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.