மழைக்காலத்தை சூப்பர் உணவுகள் (super food) மூலம் சமாளிப்போம்!

சூப்பர் புட் (super food) என்பது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே இருக்கும். இந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

அவை பழங்கள், தானியங்கள், மீன்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உலர்விதைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஆரஞ்சு

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களுக்கு ஆரஞ்சு ஏற்ற கனி ஏனெனில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.தினமும் ஒரு ஆரஞ்சு சுவைப்பதால் விட்டமின் சி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகிறது.

கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைய உள்ளது என்று நமக்கு நன்கு தெரியும். இந்த பீட்டா கரோட்டினைத் தான் நமது உடல் “விட்டமின் ஏ” வாக மாற்றுகிறது. விட்டமின் ஏ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது ஆகவே நுரையீரல் போன்ற சுவாச மண்டலங்களை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது. குளிருக்கு தோல் வறண்டு போகாமல் பதிலாக தோலுக்கு பொலிவைத் தருகிறது.

பீட்ரூட்

அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட் முழுவதும் பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் (phytochemicals and antioxidants) ஆனது.இவை ஃப்ரீ ராடிக்கல்கள் ஆரோக்கியமான டி.என்.ஏக்களை தாக்குவதை தடுக்கிறது. இரத்த உற்பத்திக்கு பீட்ரூட் தேவை. பீட்ரூட் கீரையில் வைட்டமின், இரும்புச்சத்து, மக்னீசியம் நிறைய உள்ளது.

முட்டைகள்

முட்டை ஒரு ஒன்பது விதமான அமினோ அமிலங்களை கொண்ட முழு புரத உணவு.புரதங்கள் உடலுக்கு எரிபொருள் போன்று செயலாற்றும்.இவை கிருமிகளை தாக்குகிறது.

இஞ்சி

குளிருக்கு இதமாக இஞ்சி டீயை குடிக்காமல் குளிரை கடத்த முடியாது.இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.குளிர்க்காலத்தில் அவதியுறும் ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் இஞ்சியின் Anti inflammatory பண்பால் வீக்கம் குறைந்து குணமாகிறார்கள்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குளிர்காலத்தை எதிர்க்கொள்ள சக்தியை அளிக்கிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு வீக்கம் குறைந்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

ஆரோக்கியமான உணவு பழக்கம் இருந்தால் எந்த பருவகாலத்தையும் இனிதே கடக்க இயலும்.


Super foods for monsoon(Rainy Season) includes orange, carrot, beetroot, ginger, egg, turmeric, etc. These foods are naturally filled with nutritional content. Fruits, Cereals, Sweet Potato, Fish, Dry nuts are also listed under super foods. Have a healthy lifestyle and stay healthy!!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.