நாவல்பழம் சர்க்கரை நோயாளிகள் உண்ணலாமா?

நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள்  உள்ளன. அனைத்து வயதினருக்கும் தேவையான சத்துக்கள் நிறைந்த பழம். நாவல்பழம் ஏப்ரல் மாதம் முதல் ஜீன் மாதம் வரை கிடைக்கும்.

  • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த  நாவல் பழக்கொட்டையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
  • ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது  நாவல்பழம் செய்கிறது.
  • வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியது நாவல்பழக் கொட்டை.
  • நாவல் பழக் கொட்டையிலுள்ள ஆல்கலாய்டுகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.

நாவல்பழம் எப்படி சர்க்கரையை குறைக்கிறது

நாவல் பழத்தின் விதை மற்றும் மரத்தின் பட்டைகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் –  jamboline இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆனால் இந்த மரத்தின் இலைகள் மற்றும் பழம் எவ்விதத்திலும் சர்க்கரையை குறைப்பதில்லை என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றுக் கோளாறுகள் தீர நாவல்பழ விதைகளை பயன்படுத்தி உள்ளார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க நாவல் பழக்கொட்டையை பொடி செய்து கொடுத்துள்ளார்கள். 

நாவல்பழக் கொட்டை குடிநீர்

நாவல்பழக் கொட்டையை பொடிசெய்து அதனை ஒரு தம்ளர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் கணக்கில் கொதிக்க வைத்து தினசரி பருகி வரலாம். கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும்.


Jamun is one such fruit with superior health benefits which helps combat these lifestyle related diseases. However, this sweet and sour fruit is not just great to taste, but comes with a host of health benefits such as treatment for diabetes, reduction of cholesterol, improved digestion, eye sight and skin. Jamun is very low in calories, and hence, makes for a great healthy snack if you are trying to lose weight during summers. In addition to this, jamuns are known to optimize digestion, which further helps in your weight loss management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.