சர்க்கரை நோய், இதய நோய் வராமல் இருக்க இதை செய்து பாருங்கள்!!!

சாப்பிட்டவுடன் தூங்ககூடாது என நம் வீட்டு பெரியவர்கள் கண்டிப்பதை கேட்டு வளர்ந்து வந்தோம். தொப்பை போடும் என்பதை தவிர நமக்கு எதுவும் தெரியாது. இதன்பின் உள்ள அறிவியல் விளக்கம் என்னவென்று பார்ப்போமா?

உணவும் செரிமானமும்

சாப்பிட்டவுடன் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட்  மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தால் செரிமான நீர்கள் மூலம் வயிற்றில் சிதைந்து நம் இரத்தத்தில் க்ளுகோஸ் ஆக கலக்கதுவங்குகிறது. இதனால் தான் ரத்தசர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். இன்சுலின் சுரந்து க்ளுகோஸ் டிரைகிளிசரைடு ஆக மாற்றபட்டு நம் வயிற்றில் கொழுப்பாக சேமிக்கபடும். இது எல்லாம் நடந்து முடிய 2 மணிநேரம் தேவைப்படுகிறது.

ஓய்வு நிலையில் வளர்சிதை மாற்றம் 

சாப்பிட்டவுடன் நாம் எழுந்து நின்றாலே உங்கள் உடல் நீங்கள் உட்கார்ந்திருப்பதை விட இரு மடங்கு கலோரிகளை எரித்து ஆற்றலாங ஆரம்பித்துவிடும். எழுந்து நின்றால் இரு மடங்கு அதிக கலோரிகள். மெதுவாக நடக்க ஆரம்பித்தால் 3 மடங்கு அதிக கலோரிகள் எரிக்கபடும். உடனே நமக்கு தோன்றும் ஓய்வு நிலையில் உடல் என்ன செய்யும் என்று, எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் போது கூட நம் உடல் கலோரிகளை எரித்தபடிதான் இருக்கும். இதை ரெஸ்டிங் மெடபாலிசம் என்பார்கள். 

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

சாப்பிட்டவுடன் கடுமையான உடல்பயிற்சிகள் எதுவும் செய்யகூடாது. ஆனால் காற்றார ஒரு நடை போய் வரலாம். அரைமணிநேரம் போனால் போதும். சிரமமான உடல்பயிற்சிகள் வேண்டாம். பாடலை ரசித்த வண்ணம் ஒரு சிறு நடை போதும்.

உணவுக்கு பின் கிடைக்கும் நன்மைகள் என்ன

ரத்தத்தில் சேரும் க்ளுகோஸ் ஆனது ஆற்றலாக மாறும் போது எரிக்கபட்டுவிடும். அது உங்கள் க்ளுகோஸ் அளவுகளை ஏற்றாது. டிரைகிள்சரைடு அளவுகளையும் ஏற்றாது விளைவு வயிற்றில் தொப்பை வராது.

சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக்குபின் எடுக்கவேண்டிய இன்சுலின்/மாத்திரை அளவும் குறையும். உடலில் சேரும் க்ளுக்கோஸ் கொழுப்பாக மாறுவது தடுக்கப்படுகிறது.இதன் விளைவாக உடற்பருமன், கொலஸ்டிரால், சர்க்கரை நோய், இதயநோய் வராமல் தடுக்கப்படுகிறது.


Choose foods that are low in salt, such as fresh meats, poultry, fish, dry and fresh legumes, eggs, milk and yogurt. Plain rice, pasta and oatmeal are good low-sodium choices. However, the sodium content can increase if salt or other high-sodium ingredients are added during their preparation. One way to begin is to create a daily meal plan that emphasizes vegetables, fruits and whole grains and limits high-fat foods (such as red meat, cheese and baked goods) and high-sodium foods (such as canned or processed foods). Below are two days’ worth of heart-healthy menus. Eat fish high in omega-3s, such as salmon, tuna, mackerel, herring and trout. A handful of healthy nuts such as almonds or walnuts will satisfy your hunger and help your heart. Berries are chock full of heart-healthy phytonutrients and soluble fiber.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.